- Home
- Astrology
- Rasi Palan 2026: மகரத்தில் நுழையும் செவ்வாய்: 2026 ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கப்போகுது!
Rasi Palan 2026: மகரத்தில் நுழையும் செவ்வாய்: 2026 ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அமோகமாக இருக்கப்போகுது!
Chevvai Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளில் முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. குறிப்பாக ஜனவரி 16 செவ்வாய் பகவான் தனது உச்ச ராசியான மகர ராசியில் நுழைகிறார். அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ருச்சக ராஜயோகம் 2026
2026 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் பல கிரகங்களின் நிலைகளில் முக்கிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜனவரி 16, 2026 அன்று செவ்வாய் பகவான் தனது உச்ச வீடான மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். செவ்வாய் தனது சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அமரும் பொழுது பஞ்ச புருஷ மகாயோகங்களில் ஒன்றான ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் பிப்ரவரி 23, 2026 வரை நீடிக்க இருக்கிறது.
செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவதால் அவரின் வீரியம் பல மடங்கு அதிகரித்து நற்பலன்களை வாரி வழங்க இருக்கிறார். இந்த யோகம் ஒருவருக்கு அபாரமான துணிச்சல், தலைமைப் பண்பு, நிலம் மற்றும் சொத்து சேர்க்கை, அதிகாரப் பதவிகள் ஆகியவற்றை வழங்கும். ருச்சக யோகத்தின் முழு பலன்களையும் அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். மேலும் செவ்வாய் பகவான் மேஷ ராசியின் பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருந்த மன அழுத்தம் நீங்கும். உயர் அதிகாரிகளுடன் இருந்த பிணக்குகள் தீர்க்கப்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பெரும் அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து தகராறுகள் தீர்க்கப்படும். எதிரிகள் தானாக விலகி விடுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இது திருமணம், கூட்டாண்மை, கணவன் மனைவி உறவுகளை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். தொழில் ஒப்பந்தங்கள் நல்லபடியாக இறுதியாகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமர்ந்து செவ்வாய் பகவான் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் பிரகாசிக்கும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தாயார் வழியில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்க மகிழ்ச்சி பெருகும். நீண்ட நாட்கள் இருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். திடீர் பண ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பாராத அழைப்புகள் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்து ருச்சக யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தை அடையும். கடினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்தும் வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நிர்வாகம், மேலாண்மை அல்லது அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

