- Home
- Astrology
- Guru Peyarchi 2026: சனியை விஞ்சும் குருவின் உச்ச பலன்.! ஹன்ஸ் ராஜயோகத்தால் கஷ்டங்கள் தீர்ந்து கோடீஸ்வரராகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Guru Peyarchi 2026: சனியை விஞ்சும் குருவின் உச்ச பலன்.! ஹன்ஸ் ராஜயோகத்தால் கஷ்டங்கள் தீர்ந்து கோடீஸ்வரராகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Guru Peyarchi 2026 Palangal: 2026 ஆம் ஆண்டு குரு பகவான் உருவாக்கும் ஹன்ஸ் ராஜயோகம் பற்றியும், அதனால் பலன்பெறும் ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Guru Peyarchi 2026 - குரு பெயர்ச்சி 2026
2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். சுப கிரகமான குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்கு செல்வதால் ‘ஹன்ஸ் ராஜயோகம்’ உருவாகிறது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும். குரு பகவான் தனது சொந்த ராசியான தனுசு, மீனம் அல்லது உச்ச ராசியான கடகத்தில் அமையும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இது அறிவு, செல்வம், கௌரவம், முன்னேற்றம் ஆகியவற்றைத் தரக்கூடியது.
ஹன்ஸ் ராஜயோகம்
ஜூன் 2, 2026 குரு பகவான் மிதுன ராசியிலிருந்து வெளியேறி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார். அக்டோபர் 31, 2026 வரை அவர் கடகத்திலேயே இருக்கிறார். இந்த காலகட்டத்தில் ஹன்ஸ் ராஜயோகத்தின் தாக்கம் மிகவும் வலுவாக இருக்கும். இந்த ராஜயோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளை அடைய உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் சமூகத்தில் அந்தஸ்தையும், கௌரவத்தையும் கொண்டுவரும். உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அரசு பணிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். முதலீடுகள் மூலம் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் ஆடம்பரமும், வசதி வாய்ப்புகளும் சேரும். பொன் பொருள் நகைகளை வாங்கிக் குவிப்பீர்கள். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். சமூகத்தில் உங்களுக்கான தனி அடையாளத்தைப் பெறுவீர்கள்.
கடகம்
குரு பகவான் கடக ராசியிலேயே உச்சம் பெற்று அமர்வதால் கடக ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் ராஜயோகம் நேரடி பலன்களைத் தரவுள்ளது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள் நிறைவேறும். இந்த யோகத்தின் செல்வாக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளை திறக்கும். வணிகத்தில் இருப்பவர்கள் குறிப்பிட்ட லாபத்தைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். செல்வாக்கு மிக்கவவர்களுடனான தொடர்புகள் வலுப்படும் நிதிநிலைமை மேம்படும். இழுபறியில் இருந்த பணிகள் முடிக்கப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்க இருப்பது சிறப்பு பலன்களைத் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரும். உபரி வருமானத்திற்காக இப்போதைய வாய்ப்புகள் கிடைக்கலாம். முதலீடுகள் பெரும் லாபத்தைத் தரும். பழைய கடன்கள் தீரும் திருமணத்திலிருந்து வந்த தடைகள் அகலும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். அறிவு சார்ந்த திறன்கள் மேம்படுத்தப்படும். புதிய வசதிகள், ஆடம்பரங்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறையும்.
கும்பம்
ஹன்ஸ் ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் தொழிலில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கப்படும். தொழிலில் பெரிய மாற்றம் உண்டாகும். பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து, மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலமாக சுப செய்திகளை கேட்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

