- Home
- Astrology
- Chaturgrahi Yog 2026: திருவோண நட்சத்திரத்தில் கைகோர்க்கும் 4 கிரகங்கள்.! சதுர்கிரக யோகத்தால் கோடீஸ்வர அம்சம் பெறும் 5 ராசிகள்.!
Chaturgrahi Yog 2026: திருவோண நட்சத்திரத்தில் கைகோர்க்கும் 4 கிரகங்கள்.! சதுர்கிரக யோகத்தால் கோடீஸ்வர அம்சம் பெறும் 5 ராசிகள்.!
Chaturgrahi Yog in Thiruvonam Nakshatra: இன்னும் சில நாட்களில் திருவோண நட்சத்திரத்தில் நான்கு கிரகங்கள் இணைய உள்ளன. இதனால் ஐந்து ராசிகளின் வாழ்க்கை மாறப்போகிறது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

திருவோண நட்சத்திரத்தில் அரிய கிரக சேர்க்கை
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களும் நட்சத்திரங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. அந்த வகையில் சுக்கிரன், புதன், சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை திருவோண நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. ஒரே நேரத்தில் நான்கு கிரகங்கள் திருவோண நட்சத்திரத்தில் இணைவது ஐந்து ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
திருவோண நட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். இந்த சுப கிரகங்களின் சேர்க்கையால் எந்த வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி உறவு பலப்படும். நிதிநிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
திருவோண நட்சத்திரத்தில் 4 கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். உங்கள் கனவுகள் நனவாகும். கணக்கியல், நிதி, முதலீட்டு வங்கித் துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் தொழிலில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சூழல் அனைத்தையும் சாதகமாக மாறும். பண ஆதாயம் உண்டாகும். கடன் தொல்லைகள் தீரும்.
துலாம்
துலாம் ராசிக்கு, திருவோணத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கையால் நிதி நிலை வலுப்பெறும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் பிறக்கும். அரசு திட்டங்களால் நன்மை அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இணைந்து சொத்துக்களை வாங்குவீர்கள். தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். சிறிதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
திருவோண நட்சத்திரத்தில் புதன், சுக்கிரன் உள்ளிட்ட நான்கு கிரகங்களின் சேர்க்கையால், விருச்சிக ராசிக்காரர்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் நிகழும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். போட்டித் தேர்வில் சிறப்பாக செயல்படுவீர்கள். தாயாருடன் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்லும் யோகம் உண்டு. முதலீடுகள் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, திருவோண நட்சத்திரத்தில் நான்கு கிரகங்களின் சேர்க்கை மிகவும் சாதகமாக மாறும். முற்றுப்பெறாத பணிகள் அனைத்தும் முடிவடையும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். உங்கள் கடின உழைப்புக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை அடைய கவனத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

