Chanakya Niti: உங்க ரகசியங்களை 'இந்த' 4 நபர்களிடம் மட்டும் சொல்லவே சொல்லாதீங்க!
Chanakya Niti: சாணக்கியரின் போதனைகள் நமக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளன. உங்கள் ரகசியங்களை 4 நபர்களிடம் சொல்லவே சொல்லாதீங்க என சாணக்கியர் சொல்கிறார். அது எந்தெந்த நபர்கள்? என விரிவாக பார்ப்போம்.

சாணக்கியர் சொல்லும் ரகசியம்
ஆச்சார்ய சாணக்கியரின் போதனைகள் இன்றும் நமக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ஒருவர் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும், எந்தப் பாதிப்பும் வராமல் இருக்க வேண்டும் என்றால், சில விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று சாணக்கியர் சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக, நமது வருமானம், வங்கி இருப்பு, குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் பற்றிப் பொது இடத்தில் பேசவே கூடாது. ஏனெனில், நமது கஷ்டத்தையோ அல்லது நல்ல சம்பாத்தியத்தையோ தெரிந்துகொண்டு, அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறவர்கள் இந்தச் சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:ஆகஸ்ட் 22 முதல் 'புதாதித்ய யோகம்'.. இந்த 4 ராசிகளின் தலைையெழுத்தே மாறப்போகுது! பண மழை!
இவர்களிடம் ரகசியம் சொல்லாதீர்கள்
முட்டாள்தனமான, வெகுளித்தனமான ஆட்களிடம் உங்களது ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். உங்களது குடும்ப விஷயம் அல்லது பிரச்சினைகளை ஒரு முட்டாள்களிடமோ அல்லது விவரம் இல்லாத ஒருவரிடமோ சொல்வது, உங்களது காலில் நீங்களே கோடாரியால் வெட்டிக்கொள்வது போன்றது. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எதை எங்கே பேச வேண்டும் என்று தெரியாது.
நீங்கள் அவர்களை நம்பி உங்களது கஷ்டத்தைச் சொல்லலாம், ஆனால் அவர்கள் அதை ஒரு விளையாட்டிற்காகவோ அல்லது வேறு யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும்போதோ உளறிவிடுவார்கள். இதனால் சமூகத்தில் உங்களுக்குத்தான் அவமானம், மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
இதையும் படிங்க: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 வரை 'இந்த' 4 ராசிகளுக்கு அசுர பணவரவு.. உங்க ராசி இருக்கா?
சுயநலவாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்
தேவைப்படும்போது மட்டும் உங்களைத் தேடி வருகிறவர்கள், எப்போதுமே உங்களது உண்மையான நலவிரும்பியாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட சுயநலவாதிகளிடம் உங்களது பலவீனத்தையோ, பணக்கஷ்டத்தையோ ஒருபோதும் சொல்லக் கூடாது என்று சாணக்கிய நீதி சொல்கிறது.
இந்த மாதிரி ஆட்கள், அவர்களது காரியத்தைச் சாதிப்பதற்காக உங்களது இயலாமையைப் பயன்படுத்திக்கொள்வார்கள். உங்களுக்கு உண்மையிலேயே ஒரு பிரச்சினை வரும்போது, முதலில் உங்களை விட்டுவிட்டு ஓடுவதும் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
குறை சொல்லும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்
சிலருக்கு மற்றவர்கள் மீது குறை கண்டுபிடிப்பதும், அவர்களுக்குப் பின்னால் புறம் பேசுவதும்தான் வேலையே. இப்படிப்பட்ட ஆட்களுக்கு உங்களது பிரச்சினைகளோ, தோல்விகளோ தெரிந்தால், உதவி செய்வதற்குப் பதிலாக அதை நாலு பேரிடம் சொல்லி பரப்பிவிடுவார்கள்.
உங்களது பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்கி, உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். அதனால், உங்களது தனிப்பட்ட விஷயங்களை இவர்களிடம் இருந்து எப்போதும் தள்ளியே வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Sun Transit: சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 'லாட்டரி' அதிர்ஷ்டம் பெறப் போகும் 4 ராசிகள்.. ராஜயோகம்!
ரகசியங்களைப் பாதுகாப்பது ஏன் உங்களுக்கு நல்லது?
நாம் எல்லா ரகசியங்களையும் எல்லாரிடமும் சொல்லக் கூடாது என்று சாணக்கிய நீதி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. உங்களது வருமானத்தையும், பலவீனங்களையும் நீங்கள் ரகசியமாக வைக்கும்போது, தேவையில்லாத பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
எதையும் வெளியில் சொல்வதற்கு முன்னால் நன்றாக யோசித்து, புரிந்துகொண்டு பேச வேண்டும். நமது விஷயங்களை ரகசியமாக வைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம், அதுதான் உங்களைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.

