MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 வரை 'இந்த' 4 ராசிகளுக்கு அசுர பணவரவு.. உங்க ராசி இருக்கா?

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 வரை 'இந்த' 4 ராசிகளுக்கு அசுர பணவரவு.. உங்க ராசி இருக்கா?

Venus Transit 2026: சுக்கிர பகவான் செவ்வாய்க்கு சொந்தமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளதால் 4 ராசிகளுக்கு அசுர பணவரவு கிடைத்து அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 15 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் 2026
Image Credit : AI

சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் 2026

வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன. இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், அசுரர்களின் குருவாகவும், அழகு, காதல், செல்வம், ஆடம்பரம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரகராகவும் திகழும் சுக்கிர பகவான், ஆகஸ்ட் 25 அன்று தனது நட்சத்திரப் பயணத்தை மாற்றுகிறார்.

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 வரை செவ்வாய்க்கு சொந்தமான சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிக்கும் இந்த காலகட்டத்தில், 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சியும், எதிர்பாராத பண வரவும் கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து கீழே காண்போம்.

இதையும் படிங்க:Sun Transit: சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 'லாட்டரி' அதிர்ஷ்டம் பெறப் போகும் 4 ராசிகள்.. ராஜயோகம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Asianet News

1. மேஷம்

சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதிநிலையில் பெரிய முன்னேற்றத்தைத் தரும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கும் நன்மதிப்பும் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்களின் உழைப்பைப் பாராட்டுவார்கள். தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் சுலபமாக முடிந்து, புதிய வருமான வழிகள் திறக்கும்.

இதையும் படிங்க: Astrology: சனி - சுக்கிரன் பிரதியுதி யோகம்: ஆகஸ்ட் 21 முதல் இந்த 4 ராசிகளுக்கு பண மழை!

Related Articles

Related image1
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி பலன்: ஆகஸ்ட் 19 முதல் இந்த 6 ராசிகளுக்கும் பணவரவு உறுதி.. உங்க ராசி இருக்கா?
Related image2
Shukra Dasha: பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம்! சுக்கிர திசையில் பிறக்கும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசி இருக்கா?
35
2. ரிஷபம்
Image Credit : Asianet News

2. ரிஷபம்

சொந்த ராசி அதிபதியான சுக்கிரனின் இந்த நகர்வு, ரிஷப ராசியினருக்கு பல்வேறு நேர்மறை மாற்றங்களை அள்ளித் தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளுடன் கூடிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்பிற்கான பலனை முழுமையாக அனுபவிப்பீர்கள். காதல் மற்றும் குடும்ப உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

45
3. துலாம்
Image Credit : Asianet News

3. துலாம்

துலாம் ராசி அதிபதியான சுக்கிரன், செவ்வாயின் நட்சத்திரத்திற்கு செல்வது உங்களுக்கு நிதி ரீதியாக பெரும் பலனைத் தரும். சுக்கிரனின் அருளால் நிதி நெருக்கடிகள் விலகும். முக்கியமாக, நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். தம்பதியரிடையே பிணைப்பு வலுப்படும். மன அழுத்தம் குறைந்து, எப்போதும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

55
4. விருச்சிகம்
Image Credit : Asianet News

4. விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினருக்கு, இந்த சுக்கிர பெயர்ச்சி ஒரு பொன்னான காலமாகும். புதிய வேலைக்கு மாற நினைப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த சம்பளத்தில் நல்ல வாய்ப்பு அமையும். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் மதிப்பும் பல மடங்கு உயரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். காதல் பிரச்சனைகள் தீர்ந்து, உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த அடித்தளமாக அமையும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashtalakshmi yoga: அள்ளிக்கொடுக்கும் அஷ்டலட்சுமி யோகம்! 3 ராசிகள் காட்டில் இனி பணமழை.!
Recommended image2
Shukra Yoga: சுச்கிரனால் கிடைக்கும் புதுவாழ்வு.! 5 நட்சத்திரங்கள் வாழ்வில் இனி பணமழை.!
Recommended image3
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி பலன்: ஆகஸ்ட் 19 முதல் இந்த 6 ராசிகளுக்கும் பணவரவு உறுதி.. உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி பலன்: ஆகஸ்ட் 19 முதல் இந்த 6 ராசிகளுக்கும் பணவரவு உறுதி.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Shukra Dasha: பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம்! சுக்கிர திசையில் பிறக்கும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved