MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sun Transit: சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 'லாட்டரி' அதிர்ஷ்டம் பெறப் போகும் 4 ராசிகள்.. ராஜயோகம்!

Sun Transit: சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 'லாட்டரி' அதிர்ஷ்டம் பெறப் போகும் 4 ராசிகள்.. ராஜயோகம்!

Sun Transit: சூரிய பகவான் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தனது சொந்த வீடான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் காரணமாக 4 ராசிகளுக்கு லாட்டரி அடித்த மாதிரி அதிஷ்ட மழை பொழிய போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 14 2026, 09:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி 2026
Image Credit : ai

சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் அதிபதியாகவும், 'ராஜா'வாகவும் திகழ்பவர் சூரிய பகவான். இவர் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் சூரியன், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் தனது சொந்த வீடான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

ஒரு கிரகம் தனது சொந்த ராசிக்கு செல்லும்போது அதன் பலன் இரட்டிப்பாகும். எனவே, சூரியனின் இந்த நகர்வு அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்களைத் தந்தாலும், குறிப்பாக 3 ராசியினருக்குப் மிகப்பெரிய யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க: Astrology: சனி - சுக்கிரன் பிரதியுதி யோகம்: ஆகஸ்ட் 21 முதல் இந்த 4 ராசிகளுக்கு பண மழை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Pixabay

மேஷம்

மேஷ ராசியினருக்கு சூரியன் 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்களின் சிந்தனைத் திறனும் படைப்பாற்றலும் அதிகரிக்கும். தினசரி வருமானம் உயருவதோடு, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசு வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் தேடிவரும்.புதிய வாகனம் அல்லது வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்த உடல்நலப் பிரச்சினைகள் விலகி, ஆரோக்கியம் சீராகும்.

இதையும் படிங்க: சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்.. இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

35
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

தன் சொந்த ராசியான முதல் வீட்டிற்கே (லக்னம்) சூரியன் வருவதால், சிம்ம ராசியினருக்கு தன்னம்பிக்கையும் ஆளுமைத் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். தொழிலை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு இது உகந்த காலம். நிலையான பண வரவு இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அமையும். உங்கள் பேச்சாற்றல் அதிகரிக்கும். எந்தவொரு முக்கிய முடிவையும் தெளிவாக எடுத்து வெற்றி காண்பீர்கள். நீண்ட நாள் லட்சியங்கள் நிறைவேறும்.

45
தனுசு
Image Credit : Pixabay

தனுசு

தனுசு ராசிக்கு சூரியன் 9-ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்குப் பல்வேறு வழிகளில் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.

55
துலாம்
Image Credit : Pixabay

துலாம்

துலாம் ராசியினருக்கு சூரியன் 11-ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதார ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். இதுவரை முடங்கிக் கிடந்த பண உதவிகள் தேடிவரும்.

திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். நீண்ட நாட்களாக உங்களை ஆட்டிப்படைத்த மன அழுத்தம் மற்றும் கவலைகள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். சமூக வட்டத்தில் உங்கள் மதிப்பு கூடும். மூத்த சகோதரர்கள் மற்றும் உயர்மட்ட நண்பர்களின் ஆதரவால் தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்டுள்ள ஜோதிடப் பலன்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு நபரின் பிறந்த ஜாதகம், கிரக நிலைகள் மற்றும் நடப்பு தசாபுத்திகளுக்கு ஏற்பப் பலன்கள் மாறுபடலாம். ந்தத் தகவல்களின் அடிப்படையில் பயனர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் இந்தத் தளமோ அல்லது நிர்வாகமோ எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ezharai Sani : ஏழரை சனியின் தாக்கம் குறையுமா? சனி பகவானின் அருளைப் பெற இந்தப் பரிகாரங்களைச் செய்யுங்கள்!
Recommended image2
கேது பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image3
Rasipalan: ஐப்பசி அதிர்ஷ்டத்தின் உச்சம்! பணமழை, பதவி உயர்வு? 12 ராசிக்கும் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
Related Stories
Recommended image1
Powerful Women Zodiac: அசால்ட்டா எடை போட்றாதீங்க! சத்தமில்லாமல் சாம்ராஜ்யம் அமைக்கும் 3 ராசி பெண்கள்
Recommended image2
Shukra Dasha: பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம்! சுக்கிர திசையில் பிறக்கும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved