MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி பலன்: ஆகஸ்ட் 19 முதல் இந்த 6 ராசிகளுக்கும் பணவரவு உறுதி.. உங்க ராசி இருக்கா?

Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி பலன்: ஆகஸ்ட் 19 முதல் இந்த 6 ராசிகளுக்கும் பணவரவு உறுதி.. உங்க ராசி இருக்கா?

Jupiter Transit 2026: ஆகஸ்ட் 19 முதல் குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிகளுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 6 ராசிகளுக்கு மெகா ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அது என்னென்னராசிகள் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 15 2026, 07:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
குரு நட்சத்திர மாற்றம் 2026
Image Credit : AI Image

குரு நட்சத்திர மாற்றம் 2026

வேத ஜோதிடக் கணிப்புகளின்படி, குரு தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். கடகத்தில் குரு இருப்பது வலுவான நிலையாகக் கருதப்படும் நிலையில், அதன் நட்சத்திர மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகஸ்ட் 19, 2026 அன்று அதிகாலை சுமார் 3.37 மணிக்கு குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் நுழைகிறார். அக்டோபர் 31 வரை இந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இதன் பிறகு குரு சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்துக்குச் செல்கிறார். எனவே ஆகஸ்ட் 19 முதல் அக்டோபர் 31 வரையிலான காலம் சில ராசிகளுக்கு முக்கியமானதாக இருக்கலாம் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், ரிஷப ராசியினருக்கு இந்த மாற்றம் சாதகமான பலன்களைத் தரக்கூடும் என ஜோதிடம் கூறுகிறது. வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கலாம். வேலை அல்லது தொழிலில் புதிய தொடர்புகள் உருவாகி அவை எதிர்காலத்தில் பயனளிக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் என நம்பப்படுகிறது.

Today Horoscope: ஆகஸ்ட் 15 ராசி பலன்: சில ராசிகளுக்கு வெற்றி, சிலருக்கு முக்கிய எச்சரிக்கை.. உங்கள் ராசி எது?

Related Articles

Related image1
Today Horoscope: ஆகஸ்ட் 15 ராசி பலன்: சில ராசிகளுக்கு வெற்றி, சிலருக்கு முக்கிய எச்சரிக்கை.. உங்கள் ராசி எது?
Related image2
Saturn Retrograde : சந்திர கிரகணத்திற்கு முன் ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி... 50 நாட்களுக்கு உஷாரா இருக்க வேண்டிய 3 ராசிகள் என்னென்ன?
37
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

பணவரவு மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய காலமாக இந்த நட்சத்திர மாற்றம் இருக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் அல்லது கூடுதல் சலுகைகள் தொடர்பாக நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு சாதகமான தகவல்கள் வரலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் சூழலும் உருவாகலாம். இருப்பினும் வருமானம் அதிகரிக்கும் நேரத்தில் செலவையும் திட்டமிடுவது நல்லது.

47
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

குரு கடக ராசியிலேயே பயணிப்பதால், இந்த மாற்றம் கடக ராசியினருக்கு கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. பணியிடத்தில் புதிய பொறுப்பு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம் என்று ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. சம்பளம் மற்றும் சலுகைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கலாம். வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக இருந்த சில தனிப்பட்ட அல்லது பணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சூழல் உருவாகலாம். எந்த முயற்சியையும் திட்டமிட்டு மேற்கொண்டால் நல்ல முடிவு கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.

57
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

குருவின் நட்சத்திர மாற்றம் கன்னி ராசியினருக்கு சொத்து மற்றும் வாகனம் தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்று ஜோதிடம் கூறுகிறது. நீண்ட நாட்களாக இருந்த சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். மதிப்புள்ள சொத்து வாய்ப்பு கிடைக்கும். அரசாங்கம் பணிகளுக்கு பொருத்தமான முடிவுகள் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி, சம்பளம் மற்றும் சலுகைகளில் முன்னேற்றம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் உருவாகலாம் என கணிக்கப்படுகிறது.

67
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதியான புதனுடன் தொடர்புடைய குருவின் நிலை, மகர ராசியினருக்கு பல்வேறு வழிகளில் பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும். முக்கியமான நபர்களுடன் உருவாகும் தொடர்புகள் தொழிலில் பயன் தரலாம். வேலை செய்பவர்களின் திறமை வெளிப்படுவதுடன் புதிய பொறுப்புகளும் கிடைக்கலாம். குழந்தைகளின் கல்வி அல்லது சாதனைகள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியைத் தரலாம். தொழில், வியாபாரம் ஆகியவற்றிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

77
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் காதல் மற்றும் திருமண விஷயங்களில் சாதகமான மாற்றங்களைத் தரலாம் என ஜோதிடம் கூறுகிறது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. வீடு மற்றும் வாகனம் தொடர்பான வசதிகள் அதிகரிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்கலாம் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saturn Retrograde : சந்திர கிரகணத்திற்கு முன் ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி... 50 நாட்களுக்கு உஷாரா இருக்க வேண்டிய 3 ராசிகள் என்னென்ன?
Recommended image2
Today Horoscope: ஆகஸ்ட் 15 ராசி பலன்: சில ராசிகளுக்கு வெற்றி, சிலருக்கு முக்கிய எச்சரிக்கை.. உங்கள் ராசி எது?
Recommended image3
Sun Transit: சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 'லாட்டரி' அதிர்ஷ்டம் பெறப் போகும் 4 ராசிகள்.. ராஜயோகம்!
Related Stories
Recommended image1
Today Horoscope: ஆகஸ்ட் 15 ராசி பலன்: சில ராசிகளுக்கு வெற்றி, சிலருக்கு முக்கிய எச்சரிக்கை.. உங்கள் ராசி எது?
Recommended image2
Saturn Retrograde : சந்திர கிரகணத்திற்கு முன் ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி... 50 நாட்களுக்கு உஷாரா இருக்க வேண்டிய 3 ராசிகள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved