- Home
- Astrology
- Budhan Peyarchi 2026: பிப்ரவரி முதல் வாரத்தில் புதன் பெயர்ச்சி.! செல்வந்தர்களாக மாறப்போகும் 4 ராசிகள்.!
Budhan Peyarchi 2026: பிப்ரவரி முதல் வாரத்தில் புதன் பெயர்ச்சி.! செல்வந்தர்களாக மாறப்போகும் 4 ராசிகள்.!
Budhan Peyarchin 2026 in Tamil: பிப்ரவரி 2026 முதல் வாரத்தில் புதன் பகவான் ராசியை மாற்ற இருக்கிறார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும். பண லாபத்துடன் மற்ற நன்மைகளும் உண்டாகும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.

புதன் பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கியத்துவம் வாய்ந்தவராக அறியப்படுகிறார். இவர் பேச்சு, படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தற்போது மகர ராசியில் பயணித்து வரும் அவர், பிப்ரவரி 3, 2026 அன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் 4 ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் ராசி மாற்றம் காரணமாக திடீர் பண ஆதாயம் உண்டாகும். வங்கி இருப்பு விரைவாக உயரும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய பொறுப்பும் பதவியும் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். கடன் தீரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். நிலுவையில் இருந்த பணிகளை முடித்து மன நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம். குடும்பத்துடன் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். நேர்காணல் முடிந்து காத்திருப்பவர்களுக்கு பணியில் சேர்வதற்கான அழைப்புகள் கிடைக்கப் பெறலாம்.
துலாம்
புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் உண்டாகும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைத்து நிதி நிலைமை மேம்படும். புதிய தொழில் தொடங்கலாம். திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். வீடு கட்டுதல் போன்றவற்றில் இருந்த தடைகள் நீங்கி மாமனார் அல்லது மைத்துனர் வழியில் இருந்து குறிப்பிடத்தக்க ஆதாயங்களைப் பெறுவீர்கள். புதிய முயற்சிகளை தொடங்க சாதகமான நேரமாகும்.
தனுசு
தனுசு ராசியினரின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்திற்கு தேவையான பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். தங்கம், வெள்ளி, பொன், பொருள், ஆபரணங்களின் சேர்க்கை நிகழும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வரும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

