- Home
- Astrology
- Sevvai Peyarchi 2026: நட்சத்திரத்தை மாற்றும் செவ்வாய் பகவான்.! 5 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீர்ந்து, நல்ல காலம் பொறக்கப்போகுது.!
Sevvai Peyarchi 2026: நட்சத்திரத்தை மாற்றும் செவ்வாய் பகவான்.! 5 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீர்ந்து, நல்ல காலம் பொறக்கப்போகுது.!
Sevvai Peyarchi Palangal: விரைவில் செவ்வாய் பகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், பெரும் பண லாபத்தையும் கொண்டு வரும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

செவ்வாய் பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். செவ்வாய் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போது, அது மனிதர்களின் தைரியம், மற்றும் முடிவெடுக்கும் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த ஆண்டு மார்ச் 3, 2026 அன்று செவ்வாய் பகவான், ராகுவின் சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய் என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பழைய பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கு மார்ச் மாதத்தில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் செய்து வருபவர்களுக்கு பெரிய வாபம் தரும் ஒப்பந்தங்கள் அல்லது பெரிய ஆர்டர்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மிதுனம்
செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்கு அதிர்ஷ்ட கதவுகளைத் திறக்கும். தடைபட்ட திட்டங்கள் வேகம் பெறும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் உள்ளன. பழைய முதலீடுகளிலிருந்து திடீர் பண வரவு உண்டாகும். பணியிடத்தில் உங்கள் திறமை மற்றும் புத்திசாலித்தனத்திற்கான பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும். விவாகரத்து வரை சென்ற பிரச்சனைகள் கூட இந்த காலகட்டத்தில் தீர்க்கப்பட்டு தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவானின் சதய நட்சத்திர மாற்றமானது சமூகத்தில் புகழ் மற்றும் மரியாதையை அதிகரிக்கும். அரசியலில் இருந்தால் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். எதிரிகளை வெல்வீர்கள். அரசுப் பணிகள் விரைவாக முடியும். தலைமைப் பண்பு மேம்படும். பணியிடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக விலகிச் செல்வார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கும் அதிபதி செவ்வாய் என்பதால், நேரடி நன்மைகள் கிடைக்கும். வருமானத்திற்கு புதிய வழிகள் பிறக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பணப் பிரச்சனைகள் தீரும். சொந்தமாக வீடு அல்லது நிலம் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு மார்ச் மாதம் மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வந்து பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடக்கும். சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். இதனால் நிதி பிரச்சனைகளும், கடன் சுமைகளும் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
கும்பம்
சதய நட்சத்திரம் கும்ப ராசியில் வருவதால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஆற்றலும் உற்சாகமும் பெருகும். தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத் துறையினருக்கு வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி கூடும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப காரியங்கள் நடைபெறும். நல்ல இடத்திலிருந்து வரன் தேடி வரும். நீங்கள் நினைக்கும் காரியம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் அன்பும், பாசமும் செழிக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு வலுப்பெறும். குழந்தைகளின் கல்வி அல்லது வேலை தொடர்பான நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

