- Home
- Astrology
- Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?
Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?
Venus Transit 2026: ஜூலை 4-ம் தேதி வரை சுக்கிரனின் சஞ்சார நிலையால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை. ராகு, கேதுவை விட மோசமான பலன்களை சுக்கிரன் தரப்போகிறார். கணவன்-மனைவிக்குள் சண்டை, பண நஷ்டம் ஏற்படும்.

சுக்கிர பகவான்
ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாகவும், காதல், ஆடம்பரம், மற்றும் மகிழ்ச்சியின் காரகனான சுக்கிர பகவான் சில குறிப்பிட்ட ராசிகளுக்குத் தனது சஞ்சார நிலையால் தற்காலிக சோதனைகளையும் வழங்குகிறார். அந்த வகையில், வரும் ஜூலை 4-ம் தேதி வரை சுக்கிரனின் சஞ்சார நிலை 6 ராசிகளுக்கு சற்று சுமாரான பலன்களையே தரப்போகிறது. ராகு-கேது போன்ற நிழல் கிரகங்களை விடவும் இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த ராசிகளுக்குக் கூடுதல் சவால்களை ஏற்படுத்தலாம். ஆகையால் கணவன்-மனைவி உறவு மற்றும் பொருளாதார விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அந்த 6 ராசிகள் மற்றும் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது விஷங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 3-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் ஒருவித அதிருப்தி நிலவக்கூடும். தேவையற்ற புதிய பழக்கவழக்கங்கள் அல்லது உறவுகளால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். ஆடம்பரப் பொருட்களுக்காக வரம்பிற்கு மீறி செலவு செய்து பண நஷ்டத்தை சந்திப்பீர்கள். உங்களுக்கோ அல்லது உங்கள் மனைவிக்கோ உடல்நலக் குறைபாடுகள் வந்து நீங்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு சுக்கிரன் விரய ஸ்தானத்தில் (12-ஆம் வீடு) அமர்ந்திருக்கிறார். வாழ்க்கைத் துணையை விடுத்து மற்ற புதிய நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குடும்பத்தில் பெரிய சண்டையையும், தவறான புரிதலையும் உண்டாக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளால் வருமானம் குறைந்து, கையில் பணம் தங்காத நிலை ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் (9-ஆம் வீடு) சஞ்சரிக்கிறார். காதல் மற்றும் திருமண உறவுகளில் வீண் சந்தேகங்களும், தவறான புரிதல்களும் ஏற்பட்டு தம்பதியரிடையே தற்காலிகப் பிரிவு வரலாம். வேலைப்பளு, திடீர் இடமாற்றம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகளால் மன அழுத்தம் சற்று கூடும்.
தனுசு
தனுசு ராசிக்கு சுக்கிரன் 8-ஆம் வீட்டில் மறைந்து சஞ்சரிக்கிறார். நிதி மற்றும் சொத்து சார்ந்த விவகாரங்களில் தகுந்த ஆவணங்கள் இன்றி செயல்பட்டால் பெரிய நஷ்டத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ சந்திக்க நேரிடும். வருமானம் குறைந்து செலவுகள் எகிறும். குடும்பத்தில் துணையுடன் அடிக்கடி தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் தோன்றும்.
மகரம்
மகர ராசிக்கு 7-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், குடும்ப வாழ்க்கையிலும் காதல் உறவுகளிலும் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். குடும்பத்தில் ஒருவித பதற்றமான சூழல் நிலவக்கூடும். குழந்தை பாக்கியம் தள்ளிப் போகலாம். திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்கு சுக்கிரன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். உங்கள் வாழ்க்கைத்துணைக்கு திடீர் வேலை இழப்பு அல்லது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மனக்கவலை ஏற்படலாம். தம்பதியரிடையே புரிதல் குறைபாடு ஏற்படும். மேலதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சொத்து சம்பந்தமான தகராறுகள் ஏற்படலாம்.

