- Home
- Astrology
- Sun Transit in Gemini: மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்காரர்கள் வேலை, பண விஷயத்தில் கவனம் தேவை
Sun Transit in Gemini: மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சி.. இந்த 6 ராசிக்காரர்கள் வேலை, பண விஷயத்தில் கவனம் தேவை
Sun Transit in Gemini: ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் சில ராசிக்காரர்கள் வேலை, உடல்நலம் மற்றும் நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர்.

சூரிய பெயர்ச்சியால் சோதனையை சந்திக்கும் 6 ராசிகள்
நவகிரகங்களில் தலைமை கிரகமாகக் கருதப்படும் சூரியன், ஜூன் 16ஆம் தேதி மிதுன ராசியில் நுழைந்துள்ளார். ஜூலை 16 வரை இந்த சஞ்சாரம் நீடிக்கிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சூரியன் சாதகமாக இருந்தால் பதவி, புகழ், செல்வாக்கு மற்றும் மரியாதை அதிகரிக்கும். ஆனால், சில ராசிக்காரர்களுக்கு இந்தக் கால சவால்களையும் உருவாக்கலாம்.
மேஷம்: வருமானத்துடன் செலவும் உயரும்
மேஷ ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரித்தாலும், அதைவிட அதிகமாக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணிச்சுமை அதிகரிப்பதோடு, அவசர முடிவுகள் சிக்கல்களை உருவாக்கலாம். முதலீட்டு விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
மிதுனம்: தன்னம்பிக்கையில் தடுமாற்றம்
சூரியன் நேரடியாக மிதுன ராசியில் சஞ்சரிப்பதால், தன்னம்பிக்கை குறைதல் மற்றும் முடிவெடுப்பதில் தயக்கம் நாள். தந்தையின் உடல்நிலை குறித்து கவலை அதிகரிக்கலாம். வேலை வாய்ப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் எதிர்பாராத ஏமாற்றங்கள் உருவாகலாம்.
கடகம்: உழைப்புக்கு குறைந்த பலன்
கடக ராசிக்காரர்களுக்கு அதிக உழைப்பு இருந்தாலும் அதற்கான பலன் தாமதமாக கிடைக்கக்கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம் மற்றும் மகரம்: நிதி விஷயங்களில் கவனம் தேவை
விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் தடைகள். அதிகாரிகள் தொடர்பான விஷயங்களில் பொறுமை அவசியம். மகர ராசிக்காரர்கள் கடன், பண பரிவர்த்தனை மற்றும் முதலீட்டில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மீனம்: குடும்பமும் உடல்நலமும் முக்கியம்
மீன ராசிக்காரர்களுக்கு குடும்ப அமைதி பாதிக்கப்படலாம். வீடு, வாகனம் தொடர்பான திட்டங்கள் தாமதமாகலாம். தேவையற்ற பயணங்களும் உடல்நலக் குறைபாடுகளும் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

