MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!

Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!

Astrology by Date of Birth: சூரியன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனுடன் மேலும் இரண்டு ராஜ யோகங்கள் உருவாகியுள்ளதால் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 03 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Astrology by Date of Birth
Image Credit : Asianet News

Astrology by Date of Birth

ஜோதிடத்தின்படி ஜூலை 28ஆம் தேதி வானில் ஒரு சக்தி வாய்ந்த கிரக சேர்க்கை நடைபெற்றது. சிம்ம ராசியில் குரு மற்றும் சூரியன் இருவரும் இணைந்தனர். இந்த சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இது 23ஆம் தேதி முதல் செயல்படுத்த தொடங்கினாலும், ஆடிப்பெருக்கு தினத்தில் வலுப்பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் இணைவு சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது.

இதையும் படியுங்கள் -  புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஆடி பெருக்கு நாளில் குபேர யோகம் 2026
Image Credit : Gemini AI

ஆடி பெருக்கு நாளில் குபேர யோகம் 2026

குபேர யோகத்துடன் வரிஷ்ட யோகம், விஷகம்ப யோகம், ப்ரீத்தி யோகங்களும் உருவாகியுள்ளன. மேலும் திரியேகாதச யோகமும் இணைந்துள்ளதால் மற்றொரு முக்கிய ஜோதிட நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய சுப யோகங்களால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.! 

Related Articles

Related image1
Shadashtak Yog: ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!
Related image2
Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!
37
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

சூரியன் மற்றும் குருவின் இணைவு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கிறது. நீண்ட நாட்களாக நிலவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆடிப்பெருக்கு தினமான இன்று குருவின் பார்வை மேஷ ராசியின் மீது நேரடியாக பதிகிறது. இதன் மூலம் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை உயரும். முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்கள் - 18 மந்திரவாதிகளை படிக்கட்டுகளாக மாற்றிய கருப்பசாமி.! அழகர்மலை 18 படிகளின் ரகசியம் தெரியுமா?

47
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அள்ளி வழங்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றியைப் பெறும். வெளிநாட்டு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும், வளமும், வருமானத்திற்கான புதிய வழிகளும், ஆதாரங்களும் உருவாகும்.

இதையும் படியுங்கள் - 71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!

57
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியே சூரிய பகவான் என்பதால் இந்த சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக தைரியத்தையும், ஆளுமைத் திறனையும் தரும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். மேலும் அடுத்த சில வாரங்கள் உங்களுக்கு பொற்காலமாக அமையும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முதலீடுகள் மூலம் நீண்ட கால லாபம் கிடைக்க வழி பிறக்கும்.

இதையும் படியுங்கள் -  அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?

67
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் காரணமாக பண வரவு பெருகும். ஆன்மீகம் மற்றும் தொண்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தன லாபம் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்ல முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பு மற்றும் நேர்மை காரணமாக பொருளாதாரத்தில் உன்னதமான நிலையை அடைவீர்கள்.

இதையும் படியுங்கள் - பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!

77
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shukra Dasha: பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம்! சுக்கிர திசையில் பிறக்கும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Mercury Transit : ஆகஸ்டில் அல்டிமேட் பலன்களை அள்ளித்தரும் புதன் பெயர்ச்சி... இந்த 4 ராசிகள் மட்டும் செம லக்கி..!
Recommended image3
Zodiac Signs: சனி வக்ர பெயர்ச்சி.! தீராத கஷ்டங்களுக்கு முடிவு? இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுது!
Related Stories
Recommended image1
Shadashtak Yog: ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!
Recommended image2
Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved