- Home
- Astrology
- Alagar Kovil: 18 மந்திரவாதிகளை படிக்கட்டுகளாக மாற்றிய கருப்பசாமி.! அழகர்மலை 18 படிகளின் ரகசியம் தெரியுமா?
Alagar Kovil: 18 மந்திரவாதிகளை படிக்கட்டுகளாக மாற்றிய கருப்பசாமி.! அழகர்மலை 18 படிகளின் ரகசியம் தெரியுமா?
Alagar Malai 18 Padi Karuppasamy: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் அழகர் கோவிலின் பதினெட்டாம் படிகள் குறித்த ரகசியத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Alagar Malai 18 Padi Karuppasamy
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், உலகப் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும் இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோவிலின் மூலவராக பரமசாமியும், உற்சவராக ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகரும் அருள்பாலிக்கின்றனர். இந்த திருத்தலத்தின் காவல் தெய்வமாக 18-ம் படி கருப்ப சாமி அருள்பாலிக்கிறார். இவரது சன்னதி கோயிலின் ராஜகோபுர வாசலில் மூடப்பட்ட கதவுகளில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாத பௌர்ணமி அன்று சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு தீபாரதனை காட்டப்படுகிறது.
இதையும் படியுங்கள் -Gajakesari Yoga: பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்?
கருப்ப சாமி தோற்றம்
இந்த நிகழ்வை காண உலகம் எங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அழகர் கோவிலில் குவிவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வும், மூடப்பட்ட கதவுகளுக்கு பூஜை நடத்தப்படுவதற்கு பின்னால் ஒரு ஆன்மீக வரலாறும், ரகசியமும், சுவாரஸ்யமான புராணக் கதையும் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கேரளாவை ஆண்ட மன்னன் ஒருவன், அழகர் கோயிலுக்கு வந்தான். அவன் கள்ளழகரின் அழகையும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களையும் கண்டு மயங்கினான். அவரை கேரளத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினான்.
இதையும் படியுங்கள் - சோதிடம்: தனுசு ராசியில் பிறந்தவர்களின் பிறப்பின் தெய்வீக ரகசியம் என்ன தெரியுமா?
18 மந்திரவாதிகளுக்கு காவலாக வந்த கருப்ப சாமி
இதற்காக 18 மந்திரவாதிகளை அனுப்பி கள்ளழகரை கடத்தி வர முயற்சி செய்தான். அந்த மந்திரவாதிகளுக்கு காவலாக கருப்ப சாமியையும் அனுப்பினான். கேரளத்தின் காவல் தெய்வமான கருப்பசாமி வெள்ளை குதிரையில் 18 மந்திரவாதிகளுக்கு காவலாக அழகர் மலைக்கு வந்து சேர்ந்தார். அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகரை கண்ட கருப்ப சாமி அவரது அழகில் மயங்கினார். அதே நேரம் மந்திரவாதிகள் கோயிலுக்கு வந்திருப்பதை இறைவன் கோவில் பட்டருக்கு கனவில் தோன்றி எச்சரித்தார். அருவமாய் இருக்கும் மந்திரவாதிகளை கண்டுபிடிக்க கோவில் பட்டர் தந்திரம் ஒன்றை செய்தார்.
இதையும் படியுங்கள் - 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!
18 கொள்ளையர்களை கொன்று கோவில் வாசலில் புதைத்த கருப்பன்
கோவில் பொங்கலில் அதிகளவு மிளகு கலந்து, அதை மந்திரவாதிகள் உண்ணும் படி செய்தார். மிளகின் காரத்தால் கண்ணீர் வடித்த மந்திரவாதிகளின் மந்திர மை அழிந்து, அருவமாய் இருந்த அவர்களது உருவம் வெளிப்பட்டது. மந்திரவாதிகளிடமிருந்து தங்களை காக்கும்படி அப்பகுதி மக்கள் கருப்ப சாமியை வேண்டிக் கொண்டனர். கள்ளழகரின் பக்தனான மாறிய கருப்ப சாமி, மக்களின் பக்திக்கு கட்டுப்பட்டு, யாருக்காக காவல் வந்தாரோ அவர்களையே கொன்றார். கள்ளழகரை கடத்த வந்த 18 கொள்ளையர்களையும் கொன்று கோவில் வாசலில் புதைத்து அவர்களை படிகளாக மாற்றி அதன் மேல் அமர்ந்தார்.
இதையும் படியுங்கள் -அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?
18 ஆம் படி காவலர்
கருப்ப சாமியின் செய்கையால் மகிழ்ந்த கள்ளழகர், “இனி அழகர் மலையையும் தன்னையும் 18 படியின் மீது அமர்ந்து காவல் காப்பாயாக” என்று வரமளித்தார். அன்று முதல் இன்று வரை 18 படிகளின் மேல் வீற்றிருந்து அழகர் மலையையும், கள்ளழகையும் காக்கும் காவல் தெய்வமாக கருப்பசாமி விளங்கி வருகிறார். இந்த 18 படிகள் மந்திரவாதிகளில் உருவாகவும், கதவுகள் கருப்ப சாமியாகவும் வழிபடப்பட்டு வருகிறது. இந்த சன்னதி அழகர் கோவிலின் ராஜகோபுர கதவுகளில் அமைந்துள்ளது. கருப்ப சாமிக்கு உருவம் கிடையாது. மூடப்பட்ட கதவுகளே கருப்ப சாமியாக வழிபடப்படுகிறது.
இதையும் படியுங்கள் -உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!
ஆடி பௌர்ணமி அன்று மட்டும் திறக்கப்படும் கதவுகள்
இந்த கதவுகள் வருடத்தின் அனைத்து நாட்களும் மூடப்பட்டிருக்கும். ஆடி பௌர்ணமி அன்று 5 நிமிடங்கள் மட்டும் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் தீபாரதனை செய்யப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு 18 மந்திரவாதிகளை கருப்ப சாமி கொன்று புதைத்த இடம் என்பதால் இந்த வாசல் தீட்டுப்பட்டதாக கருதப்பட்டு வாயில் அடைக்கப்பட்டது. அழகரோ, பக்தர்களோ இந்த வழியாக செல்வது மரபு கிடையாது. கருப்ப சாமி கதவுகளுக்கு பின்னால் வீற்றிருந்து கோயிலை காக்கிறார் என்று நம்பப்படுகிறது. ஆடிப் பௌர்ணமி தினத்தில் கதவுகள் திறக்கப்பட்டு குடம், குடமாக சந்தனம் பூசப்பட்டு, கதவுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அரிவாள்கள், ஈட்டிகள், கம்புகள் படிகளில் சாற்றப்படுகின்றன.
இதையும் படியுங்கள் - ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
அழகர் மலை காவலாளி
18 படிகளில் விளக்குகள், சூடங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாரதனை காட்டப்படுகிறது. இந்த நிகழ்வு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது. சித்திரை திருவிழாவின் பொழுது கள்ளழகர் மதுரைக்கு செல்லும் பொழுதும், அவர் திரும்பி கோயிலை அடையும் பொழுதும் அவரது நகைகள் கருப்ப சாமி சன்னதி முன்னாள் கணக்கிடப்பட்டு பட்டியல் வாசிக்கப்படுகிறது. கருப்பசாமி கோயில் அழகரின் நகைகளை பாதுகாப்பவர் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இது செய்யப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அழகர் கோயில் மூடப்பட்ட பிறகு கதவின் சாவி கருப்ப சாமியின் சன்னதியில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை அதை எடுத்து கோயிலை திறப்பது வழக்கம். அழகர் மலையை காவல் காக்கும் கருப்ப சாமி அநீதி செய்பவர்களை தண்டிப்பார் என்றும், நியாயம் கேட்பவர்களுக்கு நீதி வழங்குவார் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.
இதையும் படியுங்கள் - Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பேய், பிசாசு நடமாட்டத்தை உணர முடியும்.!
அருவமாய் இருந்து காவல் புரியும் தெய்வம்
மக்கள் பலரும் தங்கள் பிரச்சனைகளை கருப்ப சாமியிடம் முறையிட்டு தீர்வு காண்கின்றனர். தீர்வு கிடைத்தவர்கள் பரிகாரமாக கிடா வெட்டுவது, அன்னதானம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மந்திரவாதிகளுக்கு காவலாக வந்த கருப்பசாமி அவர்களையே படிகளாக மாற்றி அதன் மேல் வீற்றிருந்து அழகர் மலையை காத்து வருகிறார். இந்த சன்னதி ஒரு காவல் தெய்வத்தின் பக்தி, அர்ப்பணிப்பு, புராண வரலாற்றின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் கதவுகளும், அங்கு நடைபெறும் பூஜைகளும் கருப்ப சாமி அருவமாக இருந்து காவல் புரிவதை நமக்கு நினைவு படுத்துகிறது. கதவுகளுக்கு செய்யப்படும் பூஜை கருப்ப சாமியின் அருவமான இருப்பையும், அவரது காவல் பணியையும் மக்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

