- Home
- Spiritual
- Janmashtami 2026: கண்ணனை வழிபட இதுதான் சரியான முறை.! கிருஷ்ணரின் அருளைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
Janmashtami 2026: கண்ணனை வழிபட இதுதான் சரியான முறை.! கிருஷ்ணரின் அருளைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவரின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் மற்றும் எளிய பரிகாரங்களை இப்போது பார்ப்போம்.

அற்புதங்கள் நிகழ்த்தும் கிருஷ்ண ஜெயந்தி விழா
பாத்ர மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். இதனால், இந்த நாள் இந்துக்களுக்கு மிகவும் புனிதமானதாகும். கிருஷ்ண ஜெயந்தி விழா வழிாட்டு முறைகள் மற்றும் விரதங்கள் கண்ணனின் அருளை உடனே கிடைக்கவைக்கும் ஒரு சிறப்பான வழியாகும். ஒரு சில முறைகளில் கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தகாரியம் நடக்கும். பொன் பொருள் குவியும்.
குங்குமப்பூ கலந்த பாயாசம்
தொட்டிலில் வைத்து தாலாட்டுங்கள்
வீட்டில் சிறிய கிருஷ்ணர் தொட்டில் இருந்தால், அவரை அதில் வைத்து ஆட்டுங்கள். துளசி மாலை அணிவியுங்கள். காய்ச்சாத பாலில் ரோஜா அல்லது தாமரை இதழ்கள், பன்னீர், வெள்ளை சந்தனம், சிறிது கற்பூரம் கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதையும் கிளிக் செய்யுங்கள்- நெட்டிவ் எனர்ஜியை விரட்டும் கல் உப்பு.!
நெய் அல்லது வெண்ணெய் தடவுங்கள்
ஜெயந்தி அன்று, கோபாலனின் உடல் முழுவதும் நெய் அல்லது வெண்ணெய் தடவுங்கள். பிறகு, ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் அல்லது வலம்புரிச் சங்கில் காய்ச்சாத பால் மற்றும் கங்காஜலத்தைக் கலந்து அபிஷேகம் செய்து நீராட்டுங்கள். இதையும் கிளிக்க செய்யுங்கள்- ராகு கேது பார்வையால் 5 ராசிகளுக்கு அள்ள அள்ள பணம்.! குவியல் குவியலாக கிடைக்கும் தங்க புதையல்.!
புல்லாங்குழல், மயில் இறகு வைத்து வழிபாடு
ஜெயந்தி பூஜையின்போது கிருஷ்ணருக்கு ஒரு வெள்ளி புல்லாங்குழலை வைத்து வழிபட்டு, பிறகு அதை உங்கள் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். பூஜையில் மயில் இறகையும் வையுங்கள். இது கிருஷ்ணரை மகிழ்விக்கும். முடிந்தால் சில குழந்தைகளுக்கு உணவளிப்பது ஆசீர்வாதத்தைத் தரும். இதையும் கிளிக்க செய்யுங்கள்-Janmashtami 2026: கோடிகளை தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்.! விரதம் இருந்தால் என்ன கொடுப்பார் கிருஷ்ண பகவான்?!

