- Home
- Astrology
- 18 வருடங்கள் கழித்து கும்ப ராசியில் அங்காரக யோகம்.! 3 ராசிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடப்போகுது.!
18 வருடங்கள் கழித்து கும்ப ராசியில் அங்காரக யோகம்.! 3 ராசிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடப்போகுது.!
Angarak Yog 2026: 2026 ஆம் ஆண்டில் செவ்வாய் மற்றும் ராகு இருவரும் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகின்றனர். இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை உருவாக்கும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

அங்காரக யோகம் 2026
ஜோதிடத்தின்படி கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானும், நிழல் கிரகமான ராகுவும் ஒரு ராசியில் இணையும் பொழுது அங்காரக யோகம் உருவாகிறது. இது பொதுவாக அசுப யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகம் கோபம், ஆக்ரோஷம், விபத்துக்கள், தேவையற்ற சண்டைகள், உறவுகளில் விரிசல்கள் போன்ற எதிர்மறை விளைவுகளை தரக்கூடியது.
பிப்ரவரி 2026 செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்குள் நுழைந்து அங்கு ஏற்கனவே இருக்கும் ராகுவுடன் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த அங்காரக யோகம் உருவாகிறது. இது கும்ப ராசிக்காரர்களின் உடல்நிலை, ஆளுமைத்திறன் மற்றும் அமைதியை பாதிக்கலாம். இந்த காலக்கட்டத்தில் உடல் நலனில் கூடுதல் கவனம் தேவைப்படும். திடீர் காயங்கள், அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புகள் அல்லது உடல் சோர்வுகள் ஏற்படலாம்.
கோபம், பிடிவாதம், ஆக்ரோஷம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக பிறரிடம் தேவையற்ற வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. துணையுடனும், உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் எழக்கூடும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசியின் எட்டாவது வீட்டில் இந்த அங்காரக யோகம் உருவாகிறது. இது அஷ்டம ஸ்தானம் என்பதால் எதிர்பாராத சிரமங்களை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் பண இழப்புகள், எதிர்பாராத செலவுகள் காரணமாக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீண்டகால நோய்கள் மீண்டும் தலை தூக்கலாம்.
விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மறைமுக எதிரிகள் மற்றும் உறவினர்களால் சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த யோகம் ஆறாவது வீட்டில் உருவாகிறது. இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்கலாம். பணியிடம் அல்லது சமூகத்தில் உங்களுக்கு எதிரிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வழக்குகள் அல்லது சட்ட சிக்கல்களை சந்தித்து வருபவர்களுக்கு மேலும் சிக்கல்கள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். வயிறு சார்ந்த பிரச்சனைகள் தலை தூக்கலாம்.
வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். கடன் கொடுக்கல், வாங்கலில் பிரச்சனைகள் ஏற்படலாம். பிறருக்கு ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் வாக்குவாதங்கள் அல்லது மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நிதானம் அவசியம்.
பொறுமையை கடைபிடியுங்கள்
அங்காரக யோகம் பிப்ரவரி 2026 துவங்கி அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் இந்த காலகட்டத்தில் கோபத்தை அடக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஆயுதங்கள், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றை கையாளும் பொழுது அதிக எச்சரிக்கை தேவை.
சாலைகளில் நடந்து செல்லும் பொழுது அல்லது வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறவுகள் மற்றும் மற்றவரிடம் பேசும் பொழுது நிதானமாக பேச வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியாகவும், விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம்.
பரிகாரங்கள்
செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வழிபாடு செய்வது அங்காரக யோகத்தின் உக்கிரத்தை குறைக்க உதவும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
ராகுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த துர்க்கை அம்மனை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவு தானம், ஆடை தானம் செய்வது அங்காரக யோகத்தின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

