- Home
- Astrology
- 2026 ஆம் ஆண்டு முதல் தொழிலில் உச்சம் தொடப்போகும் 5 ராசிகள்.! அம்பானியாகப் போறீங்க.! உங்க ராசி இருக்கா?
2026 ஆம் ஆண்டு முதல் தொழிலில் உச்சம் தொடப்போகும் 5 ராசிகள்.! அம்பானியாகப் போறீங்க.! உங்க ராசி இருக்கா?
2026 Rasi Palan Tamil: 2026 சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை அளிக்கக்கூடிய ஆண்டாக இருக்குமாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2026 ராசி பலன்கள்
ஜோதிடத்தின்படி 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளன. வர இருக்கின்ற புத்தாண்டு பல ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். கிரகங்களின் சாதகமான சஞ்சாரம் காரணமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் 5 ராசிக்காரர்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற உள்ளனர். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை காண உள்ள அந்த ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புதிய வழிகளைத் திறக்கும் ஆண்டாக இருக்கும். குரு பகவானின் ஆசி இருப்பதால் புதிய தொழில் முயற்சிகள் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகத்தில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. தொழில் ரீதியாக தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
ரிஷபம்
இத்தனை ஆண்டுகளாக கடின உழைப்பை அளித்து வந்த ரிஷப ராசிக்காரர்கள் அதற்கான பலனை அறுவடை செய்யும் ஆண்டாக 2026 அமையும். முக்கிய கிரகங்கள் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ராகுவின் சஞ்சாரம் உங்களின் பிம்பத்தை உயர்த்தி மிகப்பெரும் இலக்குகளை அடையத் தூண்டும். இந்த ஆண்டு வருமானத்தில் எந்த குறையும் ஏற்படாது. எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தொழில் ரீதியாக நன்மைகளை அனுபவிப்பார்கள். செவ்வாய் மற்றும் குரு பகவானின் நிலை காரணமாக தொழில் மேம்படும். சனி பகவானின் செல்வாக்கு உங்கள் கனவுகளை நிஜமாக மாற்ற உதவும். மிகப்பெரிய திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களைத் தேடி நிர்வாகப் பொறுப்புக்கள் அல்லது தலைமைப் பொறுப்புக்கள் வரலாம். உங்களின் தலைமைப் பண்புகள் வெளிப்படும். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையால் தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
துலாம்
துலாம் ராசிக்கு 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொழில் ரீதியாக சிறப்பான வளர்ச்சியைத் தரும். ஜூன் மாதத்திற்கு பிறகு குரு பகவானின் சஞ்சாரம் தொழிற் ஸ்தானத்தில் இருப்பதால் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். சனி பகவானின் நிலை காரணமாக உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த அங்கீகாரம், தலைமைத்துவ வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம். ஆண்டின் பிற்பகுதியில் வியாபார விரிவாக்கம், புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு லாப ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் வருமானத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு நிதி வளர்ச்சிக்கு ஏற்ற ஆண்டாக இருக்கும். குரு பகவானின் ஆதிக்கம் காரணமாக தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான காலகட்டமாக இருக்கும். அரசுத் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். நிதி ரீதியாக ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு புதிய பாதைகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து வருபவர்களுக்கு நன்மை கிடைக்கும். தொழில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை தோற்கடித்து வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

