Birth Date : நீங்க பணக்காரர் ஆகனுமா? உங்க பிறந்த தேதிபடி இந்த பரிகாரம் பண்ணா போதும்
எண் கணிதத்தின் படி, நீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் எந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

Parihar as per Date of Birth
எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளையாகும். எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி மற்றும் அவர் பெயருக்குறிய எண் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கான பலன்கள் கணக்கிடப்படும். அந்த வகையில் எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி அடிப்படையில் அவர் எந்த பரிகாரத்தை செய்தால் அவர் வாழ்க்கையில் நிறை செல்வம் குவியும் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எண் 1 சூரிய பகவானுக்குரிய என்னாகும். எனவே எந்த மாதத்திலும் 1, 10 19 மற்றும் 28 ஆகிய நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் மீது சூரிய பகவானின் அருள் நிறைந்திருக்கும். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தினமும் சூரிய பகவானை வழிப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் வெல்லம் மற்றும் கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டியை பசுக்களுக்கு உணவாக வழங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
எண் 2
எண் கணிதத்தின் படி, எண் 2 சந்திரனுக்குரியது. எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது சந்திர பகவானின் அருள் நிறைந்திருக்கும். இவர்கள் தங்களது தாயிடமிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை தூக்கி அதை தங்களுடன் எப்போதுமே வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வெள்ளி நகை அணியுங்கள், வெள்ளிக்கோப்பையில் தண்ணீர் குடியுங்கள். இதனால் நீங்கள் சிறப்பான பலன்களை பெற முடியும் அதுபோல ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் சிவலிங்க வழிபாடு செய்யுங்கள். பாலபிஷேகம், பச்சரிசி தானமும் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு செல்வம் குவியும், அதிர்ஷ்டம் சேரும்.
எண் 3
எண் கணிதத்தின் படி, எண் 3 குரு பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 39 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது குரு பகவானின் அருள் நிறைந்திருக்கும். குரு பகவானின் ஆசியால் இந்த தேதியில் பிறந்தவர்கள் மீது மங்களகரமான பலன்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோரின் பாதங்களை தொட்டு தினமும் வணங்கி வந்தால், சிறப்பான பலன்கள் கிடைக்கும். இவர்கள் குருவின் நல்லசையை பெற ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் நெற்றியில் மஞ்சள் திலகமிட்டு, ஆலமரம் மற்றும் அரச மரத்திற்கு கீழ் இருக்கும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் விரைவில் பணக்காரர் ஆகலாம்.
எண் 4
எண் கணிதத்தின் படி, எண் 4 ராகு கிரகமுடையது. எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை ராகு கிரகம் ஆளுவார். எனவே, இந்த தேதியில் பிறந்தவர்கள் ராகுவின் அருளைப் பெற தினமும் துர்கா தேவிக்கு வழிப்பாடு செய்யுங்கள். மேலும் துர்க்கையின் புகைப்படத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். படிக்கும் மாணவர்களுக்கு பென்சில் தானமாக செய்யுங்கள். வீட்டில் செல்வம் குவியும்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எண் 5 புதன் பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது புதன் பகவான் அருள் சிறப்பாக கிடைக்கும். இவர்கள் தங்களது தாய் அல்லது மனைவி மீது மிகுந்த அன்பு காட்ட வேண்டும். மரியாதை செலுத்த வேண்டும். பரிசுகளை வழங்க வேண்டும். புதனுக்கு பச்சை நிறம் புகுந்தது என்பதால் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பசுக்களுக்கு பச்சை புல், பச்சை காய்கறிகள் வழங்க வேண்டும். மேலும் புதன்கிழமை அன்று பச்சை நிற ஆடைகள் அனைவது மிகுந்த நன்மைகளை தரும்.
எண் 6
எண் கணிதத்தின் படி, எண் 6 சுக்கிர பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது சுக்கிர பகவான் அருள் நிறைந்து இருப்பதால் செல்வம் குவியும். இந்த தேதியில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானின் அருளை முழுமையாக பெற தினமும் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வசன திரவியங்கள் போடலாம். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையென்றும் கருப்பு பசுவிற்கு உணவளிக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி அல்லது தானம் செய்யலாம். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். செல்வம் குவியும். வெற்றி பெறுவீர்கள்.
எண் 7
எண் கணிதத்தின் படி, எண் 7 கேது பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது கேது பகவான் அருள் நிறைந்திருக்கும். எனவே இந்த தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் செல்வம் நிரம்ப சிவபெருமானுக்கு புல் மற்றும் பூக்களை படைத்து வழிபட வேண்டும். மேலும் தங்க நிறத்தில் கடிகாரம் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறம் உடைய நாய்களுக்கு உணவளித்தால் நல்ல பலன்கள் குவியத் தொடங்கும்.
எண் 8
எண் கணிதத்தின் படி, எண் 5 சனி பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 5, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது சனி பகவான் அருள் எப்போதும் இருக்கும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனிபகவானின் அருளை முழுமையாக பெற ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட வேண்டும். அதுபோல ஆலமரத்திற்கு அருகில் கருப்பு நிற கரும்புள்ளிக்கு இனிப்பு வைக்கவும். ஏழைகளுக்கு உதவி, தியானம் செய்வது நல்லது. மேலும் சனிக்கிழமை தோறும் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.
எண் 9
எண் கணிதத்தின் படி, எண் 9 செவ்வாய் பகவானுக்குரியது. எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மீது செவ்வாய் பகவானின் மகத்தான நல் ஆசிகள் நிறைந்திருக்கும். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவான் முழுமையான நல்ஆசிகளை பெறவும், வாழ்க்கையில் வளம் பெறவும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் வீட்டிற்கு அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அனுமன் சாலிசாவை தவறாமல் படிக்க வேண்டும். கைகளில் எப்போதுமே சிவப்பு நிற கயிறை கட்ட வேண்டும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் சிவப்பு நிற ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை வழங்கும்.