எண் கணிதத்தின் படி, உங்களது பிறந்த தேதி அடிப்படையில் நீங்கள் எந்த தொழில் செய்தால் அதில் ஓஹோனு வருவீர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். எண் கணிதத்தின் அடிப்படையில் ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது குணாதிசயம், தொழில் வாழ்க்கை, எதிர்காலம் போன்றவற்றை கணிக்க முடியும். எண் கணிதத்தின் படி, 1-9 வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் ஆற்றலை கொண்டிருக்கும். இந்த எண்கள் தான் ஒரு நபரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் எண் கணிதத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி அடிப்படையில் அவர் என்ன தொழில் செய்தால் அதில் ஓஹோ என்று வருவார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
வாழ்க்கை பாதை எண் என்றால் என்ன?
அதற்கு முன்பு ஒருவர் தங்களது வாழ்க்கை பாதை எண் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை பாதை எண்ணா? என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அப்படியானால், ஒருவர் 22-12-1996 இல் பிறந்திருந்தால் அந்நபரின் வாழ்க்கை பாதை எண் 5 ஆகும். அதாவது, 2+2+1+2+1+9+9+6=32, 3+2=5 என்ற அடிப்படையில் கணக்கிடவும்.
எண் 1
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 1 யை கொண்டவர்கள் ராணுவ அதிகாரி, அரசியல் தலைவர், தலைமை நிர்வாகி அதிகாரி, குழுத் தலைவர் கண்டுபிடிப்பாளர், புதுமைப்பித்தன், தயாரிப்பு நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியவற்றில் இருந்தால் சிறந்து விளங்குவார்கள்.
எண் 2
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 2 யை கொண்டவர்களுக்கு திருமண பொருத்தம் செய்யும் வேலை, கவுன்சிலர், பேச்சாளர், கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஜோதிடர், ஆலோசகர் மீடியேட்டர் போன்ற துறைகளில் வேலைகள் செய்வது சிறப்பாக இருக்கும்.
எண் 3
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 3 யை கொண்டவர்களுக்கு மருத்துவர், மார்க்கெட்டிங், எழுத்தாளர், நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர், ஆசிரியர், வழக்கறிஞர், பேச்சாளர், சேல்ஸ் செய்பவர் போன்ற துறைகள் பொருத்தமாக இருக்கும்.
எண் 4
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 4 யை கொண்டவர்களுக்கு பொறியாளர், வர்த்தகம், தொழில்நுட்பம், பத்திரிக்கையாளர், பங்கு சந்தை போன்றவை சிறந்ததாக இருக்கும்.
எண் 5
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 5 யை கொண்டவர்களுக்கு நடிகர், இசைக் கலைஞர், வணிகம், சேல்ஸ்மேன் போன்ற துறையில் இருந்தால் அவர்கள் அதில் கொடி கட்டி பறப்பார்கள்.
எண் 6
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 6 யை கொண்டவர்களுக்கு கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், பியூட்டிஷியன், கட்டிடக் கலைஞர், மேக்கப் கலைஞர், நகைகள் செய்வது ஆடம்பர பிராண்ட்டில் தொழில் போன்றவற்றில் இருந்தால் அதில் சிறந்து விளங்குவார்கள்.
எண் 7
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 7 யை கொண்டவர்களுக்கு ஆன்மீகம், மருத்துவர் ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்றவை இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
எண் 8
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 8 யை கொண்டவர்களுக்கு முதலீட்டாளர், ரியல் எஸ்டேட், வங்கி, நிதி மேலாளர், கட்டுமானம் போன்ற துறைகளில் இருந்தால் அதில் அவர்கள் ஓகோவென்று வருவார்கள்.
எண் 9
எண் கணிதத்தின்படி, வாழ்க்கை பாதை எண் 9 யை கொண்டவர்களுக்கு கட்டுமானம், பேச்சாளர், சுகாதாரத்துறை, தொழில்நுட்பம், ராணுவம், உணவு போன்ற தொழில் செய்தால் அதில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
