Aani Month 2026: ஆனி மாத ராசிபலன் 2026 - 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Aani Month 2026: ஜூன் 15, 2026 ஆனி மாதம் பிறந்துள்ள நிலையில், மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு என்ன பலன்கள் மற்றும் பரிகாரங்கள் என்பது குறித்து இங்கு காணலாம்

Aani Matha Rasi Palan 2026
ஜூன் 15, 2026 அன்று சூரிய பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். தமிழ் மாத கணக்குப்படி இது ஆனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. ஜோதிடத்தின்படி சூரிய பகவானின் வடதிசைப் பயண காலமான உத்ராயணத்தின் கடைசி மாதமாக ஆனி மாதம் விளங்குகிறது. நவகிரகங்களின் தலைவனான சூரியனின் இந்த இடமாற்றம், 12 ராசிகளுக்கும் எந்த மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்பதையும், 12 ராசிகளுக்குமான பரிகாரங்களையும் விரிவாகக் பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: Vyatipat Yog 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் ஆபத்து.! உருவாகும் விபரீத யோகம்.! 5 ராசிகளுக்கு எச்சரிக்கை மணி.!
மேஷம்
மேஷ ராசிக்கு சூரியன் 3-ஆம் இடமான முயற்சி ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே இந்த காலக்கட்டத்தில் உங்கள் தைரியமும், வீரியமும் அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சாதகமான காலம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
இதையும் படியுங்கள்: Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!
ரிஷபம்
சூரியன் உங்கள் ராசிக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானத்திற்குச் செல்கிறார். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி காக்க பேச்சில் நிதானம் தேவை. பண வரவு நன்றாக இருக்கும், ஆனால் அதே சமயம் செலவுகளும் காத்துக் கொண்டிருக்கும். வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்: Mangal Gochar 2026: சூரிய கிரகண நாளில், செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு டபுள் டென்ஷன், யாருக்கெல்லாம் ஆபத்து?
மிதுனம்
சூரியன் உங்கள் ராசியிலேயே (1-ஆம் இடம்) பிரவேசிக்கிறார். உங்கள் ராசி நாதன் புதனோடு சூரியன் இணைவதால் 'புதாதித்ய யோகம்' உண்டாகிறது. இதனால் அறிவாற்றல் கூடும். ஆனால், கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாகக் கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வதுடன், ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
இதையும் படியுங்கள்: Somvati Amavasya 2026: சோமவதி அமாவாசை 2026 - 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.! பணம் மூட்டை மூட்டையை கொட்டப்போகுது.!
கடகம்
சூரியன் கடக ராசிக்கு 12-ஆம் இடமான விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். எனவே இந்த மாதம் உங்களுக்கு சுபச் விரயங்கள் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம். கண்கள் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். எனவே ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும்.
இதையும் படியுங்கள்: Name Numerology: உங்க பெயர் 'M'ல தொடங்குதா? எப்போ சொந்த வீடு வாங்குவீங்கன்னு தெரிஞ்சுக்கோங்க.!
சிம்மம்
ராசி நாதனான சூரியன் 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இந்த ஆனி மாதம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அடுத்த ஒரு மாதம் தொட்டதெல்லாம் பொன்னாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் இலட்சியங்கள் நிறைவேறும். தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானை வழிபடுவது யோகத்தை அதிகரிக்கும்.
கன்னி
சூரியன் உங்கள் ராசிக்கு 10-ஆம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு வருகிறார். "பத்தில் சூரியன் பதவி உயர்வு" என்ற ஜோதிட விதிப்படி, உங்கள் கௌரவம் உயரும் மாதம் இது. தந்தையின் உடல்நலம் சீராகும் மற்றும் அவரிடமிருந்து சொத்து சேர்க்கை அல்லது உதவி கிடைக்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய இதுவே சரியான நேரம்.
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடவும்.
துலாம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்கிறார். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பித்ருக்களின் ஆசி கிட்டும். வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட தடைகள் நீங்கும்.
விருச்சிகம்
சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு மறைகிறார். எனவே நீங்கள் எதிலும் சற்று நிதானமாகச் செயல்பட வேண்டும். வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கவனம் தேவை. தேவையற்ற வதந்திகளுக்கும் அவப்பெயர்களுக்கும் ஆளாக நேரிடலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வரவு இருந்தாலும் செலவுகள் துரத்தும்.
பரிகாரம்: தினமும் 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதுவதும், பிரதோஷ வழிபாடும் உங்களைக் காக்கும்.
தனுசு
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு வருகிறார். கணவன்-மனைவி இடையே சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் தலைதூக்கலாம், விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்கள் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
மகரம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு வருகிறார். "ஆறில் சூரியன் நன்மைகளை வாரி வழங்குவார்." உங்களின் எதிரிகள் செய்யும் சதிகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன்கள் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
கும்பம்
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுகமான முடிவு கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறை மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள்.
பரிகாரம்: நந்தியம் பெருமானை வழிபடுவது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
மீனம்
சூரியன் உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு வருகிறார். எனவே தாயாரின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சிறிய அளவிலான மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வேலை நிமித்தமாக அலைச்சல்களும், தேவையற்ற இடமாற்றங்களும் வரலாம். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலையில் காயத்ரி மந்திரத்தை 21 முறை ஜெபிப்பது மன அமைதியையும் ஆற்றலையும் தரும்.

