MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்! இவங்களுக்கு எப்பவுமே ஏறுமுகம் தான்!

Astrology: சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்! இவங்களுக்கு எப்பவுமே ஏறுமுகம் தான்!

Astrology: ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி பகவான் ஆசி பெற்ற 4 ராசிகள் என்னென்ன? சனி ஆசி இவர்களுகு என்னென்ன பலன்கள் கொடுக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : May 18 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்
Image Credit : AI

சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்

ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரகங்களில் 'கர்ம காரகன்' என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதால், அவரை 'நீதிமான்' என்றும் அழைப்பார்கள். சனி பகவான் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருந்து வருகிறது. ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் அனைவருக்கும் கெடுதல் செய்வதில்லை.

குறிப்பாக, சில ராசிகள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானவை. அந்த ராசிகளின் மீது சனியின் வக்ர பார்வை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக, அவர்களுக்கு எப்போதும் சனி பகவானின் மறைமுக ஆதரவு இருந்து கொண்டே இருக்கும். சனி பகவானின் ஆசி பெற்ற அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இந்த பதிவில் பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மகரம்
Image Credit : stockPhoto

மகரம்

மகர ராசியின் அதிபதியே சனி பகவான் தான். தனது சொந்த ராசி என்பதால், மகர ராசிக்காரர்கள் மீது சனி பகவானுக்கு எப்போதும் ஒரு தனி பாசம் உண்டு. இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும், விடாமுயற்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சனி பகவான் இவர்களுக்கு தொடக்கத்தில் சில சோதனைகளை தந்தாலும், இறுதியில் மிகப்பெரிய வெற்றியையும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் தேடித்தருவார்.

Related Articles

Related image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Related image2
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
35
கும்பம்
Image Credit : Google

கும்பம்

மகரத்தை போலவே கும்ப ராசியும் சனி பகவானின் சொந்த வீடு (மூலத்திரிகோண ராசி) ஆகும். இந்த ராசிக்காரர்கள் நேர்மையானவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சனி பகவானுக்கு நேர்மையும், நீதியும் மிகவும் பிடிக்கும் என்பதால், கும்ப ராசியினருக்கு ஆபத்துக் காலங்களில் யாராவது ஒருவழியில் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். இவர்களது உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

45
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் உச்சம் பெறும் ராசி துலாம் ஆகும். இதனால், துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் வாரி வழங்குவதில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை. இந்த ராசிக்காரர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். சனி பகவானின் அருளால் இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி மற்றும் சொத்து சேர்க்கை போன்ற யோகங்கள் தேடி வரும்.

55
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். ஜோதிட ரீதியாக சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் ஆகும். இதனால், ரிஷப ராசிக்காரர்கள் மீது சனி பகவான் எப்போதும் கனிவான பார்வையையே கொண்டிருப்பார். இவர்களது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், சனி பகவானின் அருளால் அதிலிருந்து எளிதாக மீண்டு வந்துவிடுவார்கள். பொருளாதார ரீதியாக இவர்களுக்கு பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படுவதில்லை.

சனி பகவானுக்கு பிடித்த ராசியாக இருந்தாலும் சரி, மற்ற ராசிகளாக இருந்தாலும் சரி, நாம் செய்யும் நல்ல காரியங்களும், உழைப்பும், நேர்மையும் மட்டுமே சனி பகவானின் முழுமையான அருளைப் பெற்றுத் தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Recommended image2
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Recommended image3
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!
Related Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved