MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • KCC Loan Scheme: விவசாயிகளுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்.. ரூ.5 லட்சம் வரை கடன், 4% வட்டியில் வாய்ப்பு

KCC Loan Scheme: விவசாயிகளுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்.. ரூ.5 லட்சம் வரை கடன், 4% வட்டியில் வாய்ப்பு

KCC Loan Scheme: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு 4% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 18 2026, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன்
Image Credit : our own

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன்

விவசாயிகளின் அன்றாட தேவைகளுக்கு தேவையான பணத்தை எளிதாகப் பெற உதவும் முக்கியமான கடன் வசதிகளில் ஒன்றாக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் உள்ளது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாயச் செலவுகளுக்கு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன்பிடி போன்ற தொடர்புடைய பணிகளுக்கும் இந்தக் கடன் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கான கடன் வசதியை அதிகரிக்கும் வகையில், 2025-26 நிதியாண்டில் மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு ஏற்ப அதிக நிதியைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கிசான் கிரெடிட் கார்டு வட்டி
Image Credit : Gemini

கிசான் கிரெடிட் கார்டு வட்டி

கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பு குறைந்த வட்டி விகிதமாகும். விதிமுறைகளுக்கு உட்பட்ட குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதில், கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதனால் உள்ளவர்களுக்கு கடனின் பயனுள்ள வட்டி விகிதம் 4 சதவீதமாக குறையலாம். இருப்பினும் இந்த வட்டி சலுகை திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கடன்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
Monthly Income Scheme: மாதம் ரூ.5,000க்கு மேல் வருமானம் வேண்டுமா? ஒருமுறை பணம் போட்டால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும்
Related image2
Business Idea: பழைய பிளாஸ்டிக் டிரம் போதும்! லட்சங்களில் வருமானம் தரும் பிவிசி பைப் பிசினஸ் ஐடியா
35
விவசாய கடன் திட்டம்
Image Credit : iStock

விவசாய கடன் திட்டம்

பிணையம் இல்லாமல் கடன் பெறுவதற்கான வரம்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஜனவரி 1 முதல், குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு ரூ.2 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களிடம் உள்ள நிலம் அல்லது பிற சொத்துகளைப் பிணையாக வழங்காமல் நிறுவனக் கடனைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கிசான் கிரெடிட் கார்டு வசதி விவசாயத்தை மட்டும் சார்ந்ததாக இல்லாமல் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன்பிடி போன்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

45
கிசான் கிரெடிட் கார்டு
Image Credit : our own

கிசான் கிரெடிட் கார்டு

இதற்கிடையில், கிசான் கிரெடிட் கார்டு கடன் தொடர்பான செயல்முறைகளை மேலும் ஒழுங்குபடுத்த இந்திய ரிசர்வ் வங்கியும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளன.

அதற்கு முன்பாக வழங்கப்பட்டுள்ள கடன்கள், அவற்றின் முதிர்வு காலம் அல்லது அடுத்த புதுப்பிப்பு நடைபெறும் வரை தற்போதைய விதிமுறைகளின்படி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய விதிகள் வெளியான உடனேயே ஏற்கனவே உள்ள அனைத்து கிசான் கிரெடிட் கார்டு கடன்களுக்கும் அவை பொருந்தும் என்று கருத வேண்டியதில்லை.

55
கிசான் கிரெடிட் கார்டு கடன்
Image Credit : our own

கிசான் கிரெடிட் கார்டு கடன்

மொத்தத்தில், விவசாயிகளுக்கு அதிக நிதி வசதியை வழங்குவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்ட கடன் வரம்பு, 7 சதவீத வட்டி மற்றும் உரிய காலத்தில் கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 3 சதவீத ஊக்கத்தொகை ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன. அதேநேரத்தில் ரூ.5 லட்சம் என்பது ஒவ்வொரு விவசாயிக்கும் தானாக வழங்கப்படும் தொகை கிடையாது.

விவசாயியின், பயிர் வகை, கடன் தேவை, திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வங்கியின் மதிப்பீடு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில்தான் இறுதிக் கடன் தொகை விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்படும். எனவே கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், அருகிலுள்ள அல்லது தொடர்புடைய அதிகாரிகளிடம் தங்களுக்கான தகுதி மற்றும் கடன் வரம்பை வங்கி உறுதி செய்வது நல்லது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விவசாயம்
விவசாயக் கடன்
கடன்
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crop Loan: பயிர்க்கடன் தள்ளுபடி லிஸ்ட்.! உங்க பெயர் இருக்கா?! எப்படி செக் செய்யனும் தெரியுமா?
Recommended image2
வீட்டுத் தோட்டத்திலேயே சிவப்பு தங்கம்: க்ரோ பேக்கில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி?
Recommended image3
Carrot Farming: க்ரோ பேக்கில் கேரட் வளர்க்க சூப்பர் டிப்ஸ்... இனி கடைக்குப் போக வேண்டாம்!
Related Stories
Recommended image1
Monthly Income Scheme: மாதம் ரூ.5,000க்கு மேல் வருமானம் வேண்டுமா? ஒருமுறை பணம் போட்டால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும்
Recommended image2
Business Idea: பழைய பிளாஸ்டிக் டிரம் போதும்! லட்சங்களில் வருமானம் தரும் பிவிசி பைப் பிசினஸ் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved