Tamil

க்ரோ பேக்கில் பீட்ரூட் வளர்ப்பது எப்படி?

வீட்டுத் தோட்டத்திலோ, மொட்டை மாடியிலோ க்ரோ பேக் பயன்படுத்தி, சுலபமா பீட்ரூட் வளர்க்கலாம். இது குறித்து பார்ப்போம்.

Tamil

மண் கலவை ரெடி பண்ணுங்க

க்ரோ பேக்ல, தண்ணி தேங்காத மாதிரி மண் கலவை ரெடி பண்ணனும். அதுக்கு, மக்கிய மாட்டுச் சாணம், தென்னை நார்க்கழிவு, செம்மண் எல்லாத்தையும் சம அளவுல கலந்துக்கோங்க.

Image credits: Getty
Tamil

கொஞ்சம் சுண்ணாம்பு

மண்ணோட அமிலத்தன்மையைக் குறைக்க, கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்தா செடி வேகமா வளரும்.

Image credits: pixabay
Tamil

அரை இன்ச் ஆழத்தில் விதை

நல்ல தரமான விதைகளை 5-6 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அப்புறமா அரை இன்ச் ஆழத்துல நடுங்க.

Image credits: pixabay
Tamil

தண்ணீர் பாய்ச்சுவது

தினமும் மிதமான அளவுல தண்ணி ஊத்துனா போதும். அதிகமா தண்ணி ஊத்துனா, கிழங்கு அழுகிப் போயிடும்.

Image credits: pixabay
Tamil

ஜீவாமிர்தம்

செடி முளைச்சு ரெண்டு வாரம் கழிச்சு, ஜீவாமிர்தம், புளிச்ச கடலைப் புண்ணாக்கு, இல்லனா ஆட்டுப் புழுக்கை மாதிரியான இயற்கை உரங்களைக் கொடுக்கலாம்.

Image credits: pixabay
Tamil

பொட்டாசியம் உரம்

கிழங்கு நல்லா பெருசா வர்றதுக்கு, பொட்டாசியம் சத்து இருக்குற உரங்கள் உதவும்.

Image credits: pixabay
Tamil

அறுவடை நேரம்

விதை நட்ட 70-லிருந்து 90 நாட்களுக்குள்ள பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

Image credits: pixabay
Tamil

சரியான அளவில் அறுவடை

கிழங்கு சரியான சைஸ் வந்ததும், தாமதிக்காம உடனே பறிச்சிடுங்க. இந்த வழிகள் மூலம் இனி உங்க வீட்டிலேயே பீட்ரூட் வளர்க்கலாம்.

Image credits: pixabay

Carrot Farming: க்ரோ பேக்கில் கேரட் வளர்க்க சூப்பர் டிப்ஸ்... இனி கடைக்குப் போக வேண்டாம்!

Cucumber Tips: வெள்ளரி செடியில் நிறைய காய் காய்க்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Balcony Gardening: பால்கனியில் காய்கறி தோட்டம் போடுறீங்களா? இந்த 7 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

வீட்டு தோட்டத்தில் வெங்காய சாகுபடி! அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகம்