நீர் வடிந்து செல்லும் வசதியுள்ள, சூரிய ஒளி நன்கு கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும்.
விதை விதைத்து நாற்றுகள் உருவாக்கிப் பின்னர் நடவு செய்ய வேண்டும்.
ஆர்கா கல்யாண் வகை வெங்காயம் நல்ல மகசூல் கொடுக்கும் . விதைத்த 6-8 வாரங்களுக்குப் பிறகு நாற்றுகளை நட்டு வளர்க்கலாம்.
அடி உரமாக மாட்டுச் சாணம் இட்டு மண்ணைப் புரட்டி, 15 செ.மீ. இடைவெளியில் வரப்புகளில் 10 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்யவும்.
நட்டவுடன் நீர் ஊற்ற வேண்டும். மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்க கூடாது.
நடும்போது அடி உரமாக 600 கிராம் யூரியா, ஒரு கிலோ ராஜ்ஃபோஸ், 500 கிராம் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவற்றைக் கலந்து இடவும்.
களைகள் வெங்காயச் சாகுபடிக்குக் கேடு விளைவிக்கும். களைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
வெங்காயம் அறுவடைக்குச் சுமார் 140 நாட்கள் ஆகும்.