Tamil

வெள்ளரி செடியில் நிறைய காய் காய்க்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

Tamil

சூரிய ஒளி அவசியம்

நல்ல சூரிய ஒளி படும், தண்ணீர் தேங்காத இடத்தை செடி நட தேர்வு செய்யுங்க. மண்ணை நல்லா கிளறி, மாட்டுச் சாணம், வேப்பம் புண்ணாக்கு, எலும்புப் பொடி கலந்து பாத்தி கட்டுங்க.

Image credits: pixabay
Tamil

ஒரு பாத்திக்கு 3-4 விதைகள்

விதைகளை வரிசையாக 4-5 அடி இடைவெளியில் நடலாம். ஒவ்வொரு பாத்தியிலும் 3-4 விதைகள் வரை நடலாம். விதைப்பதற்கு முன் 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், விதைகள் சீக்கிரம் முளைக்கும்.

Image credits: pixabay
Tamil

மூடாக்கு போடுங்கள்

செடி வளரத் தொடங்கும் போது, பாத்தியில் பச்சை இலைகள் அல்லது காய்ந்த சருகுகளைப் பயன்படுத்தி மூடாக்கு போடுங்க.

Image credits: pixabay
Tamil

பந்தல் அமைத்துக் கொடுங்கள்

கொடி படர ஆரம்பிக்கும்போது பந்தல் அமைத்துக் கொடுங்க. இல்லைனா கயிறு கட்டி படர விடுங்க. கொடிகள் தரையில் படாமல் இருந்தால், காய்கள் அழுகிப் போவதை தடுக்கலாம்.

Image credits: pixabay
Tamil

தண்ணீர் பாய்ச்சுவது

செடிக்கு தினமும் தவறாமல் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், தண்ணீர் தேங்கி நிற்க கூடாது. காய் பிடிக்கும் நேரத்தில் தண்ணீர் குறைந்தால், வெள்ளரிக்காய் கசப்பு தன்மை அடைய வாய்ப்புள்ளது.

Image credits: pixabay
Tamil

இயற்கை உரம்

கொடி படரும்போது, புளித்த கடலைப் புண்ணாக்கு, ஜீவாமிர்தம் அல்லது கஞ்சியில் மாட்டுச் சாணத்தைக் கலந்து ஊற்றலாம். இது ஒரு சிறந்த இயற்கை உரம்.

Image credits: pixabay
Tamil

சாம்பல்

காய் பிடிக்கும் நேரத்தில் செடியின் பாத்தியில் சாம்பலைத் தூவினால், நிறைய பூக்கள் பூத்து, காய்கள் காய்க்கும்.

Image credits: pixabay
Tamil

காய்களைப் பாதுகாப்பது எப்படி?

வெள்ளரி விவசாயத்தில் காய்ப் பூச்சி ஒரு பெரிய வில்லன். காய்கள் சிறியதாக இருக்கும்போதே, பேப்பர் பைகள் அல்லது கவர்களைப் பயன்படுத்தி மூடிப் பாதுகாத்திடுங்க.

Image credits: pixabay
Tamil

வேப்பெண்ணெய்-பூண்டு கரைசல்

இலைப்பேன், வெள்ளை ஈ போன்ற பூச்சிகளைத் தடுக்க, 2% அடர்த்தி கொண்ட வேப்பெண்ணெய்-பூண்டு கரைசல் அல்லது சோப்புக் கரைசலை வாரத்திற்கு ஒரு முறை மாலையில் தெளிக்க வேண்டும்.

Image credits: pixabay
Tamil

அறுவடை

செடி பூக்கத் தொடங்கிய 45-50 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அறுவடை செய்ய தாமதமானால், காய்கள் முற்றி கடினமாகிவிடும். அதனால், சரியான பதத்தில் இருக்கும்போதே பறித்துவிடுங்கள்.

Image credits: pixabay

Balcony Gardening: பால்கனியில் காய்கறி தோட்டம் போடுறீங்களா? இந்த 7 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

வீட்டு தோட்டத்தில் வெங்காய சாகுபடி! அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகம்

வீட்டுத்தோட்டத்தில் வெண்டை சாகுபடி.! ஆண்டு முழுவதும் இயற்கை காய்கறி.!