Asianet News TamilAsianet News Tamil

சேலைக்குள் சோலையாய் புன்னகை பூத்த வாணி போஜன்!! சிகப்புச் சேலையில் கௌதமியை நினைவுபடுத்துறாங்களே!!

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குள் புகுந்து, எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் வாணி போஜன். சிகப்பு நிற சேலையில் லேட்டஸ்டாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் மனசுகளில் காதல் தீயைப் பற்ற வைத்துள்ளது.

Actress Vani Bhojan latest stills in Red Saree
Author
Chennai, First Published Oct 29, 2021, 7:50 AM IST | Last Updated Oct 29, 2021, 7:50 AM IST

Actress Vani Bhojan latest stills in Red Saree

தெய்வமகள் சீரியல் சத்யப்ரியா கேரக்டர் தான் வாணி போஜனை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தியது. அதனால் தானோ என்னவோ மார்டன் உடைகளைக் காட்டிலும் சேலையில் வரும் வாணியின் புகைப்படங்கள் உடனே வைரலாகிவிடுகின்றன.

Actress Vani Bhojan latest stills in Red Saree

கடந்த 2020ம் ஆண்டு வெளியான ”ஓ மை கடவுளே” திரைப்படத்துக்குப் பிறகு, “ட்ரிப்பிள்ஸ்”, “லாக் அப்”, “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” போன்ற வெப் சீரீஸ் மற்றும் ஒடிடி படங்களில் நடித்து வருகிறார்.

Actress Vani Bhojan latest stills in Red Saree

”பகைவனுக்கு அருள்வாய்”, “மஹான்”, “கேசினோ” உள்ளிட்ட இவரது அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் தற்சமயம் பிஸியான ஹீரோயீன்களில் ஒருவராக உள்ளார் வாணி போஜன்.

Actress Vani Bhojan latest stills in Red Saree

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் ஃபாலோயர்களுக்கும் மேல் வைத்திருக்கும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதுமே ட்ரெண்டிங் ரகங்கள். அதிலும் சிகப்புப் புடவையில், மல்லிகைப்பூவுடன் படு கேசுவலாக வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ஹார்ட்டின்களை வாரி இரைத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Actress Vani Bhojan latest stills in Red Saree

மார்டன் உடையிலும் கிரங்கவைத்து, ஹோம்லி லுக்கிலும் உள்ளம் கொள்ளைகொள்ளும் வாணி போஜனுக்கு ஆறிலிருந்து அறுபது வரை ரசிகர் பட்டாளம் உண்டு. சமீப காலமாக ஒடிடிக்களின் விருப்பத் தேர்வாக மாறியிருக்கும் வாணி, ஆர்யாவுடன் ஒரு புதிய வெப்-சீரீஸில் ஜோடி சேரப்போவதாகவும் பேசப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios