கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் மறைவிற்கு பிரபல மணற்சிற்பி சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் வடித்து மரியாதை செலுத்தினார்.

ஆல்டைம் பெஸ்ட்  கால்பந்து ஜாம்பவனான அர்ஜெண்டினாவை சேர்ந்த மாரடோனா, நேற்று உயிரிழந்தார். அர்ஜென்டினாவில் உள்ள லா பிளேடாவில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

மாரடோனாவின் மறைவு கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் விளையாட்டு, அரசியல், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபல மணற்சிற்பியான சுதர்சன் பட்நாயக், உங்களது(மாரடோனா) கோல்களை மிஸ் செய்கிறோம் என்று மாராடோனாவின் உருவத்தை மணற்சிற்பமாக வடித்து, மரியாதை செலுத்தினார்.