சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரியா, இந்தோனேஷியா, எகிப்து, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 12 நாடுகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்திய சிறப்பு ஒலிம்பிக், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக், அரிமா சங்கம் ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. ‘மருத்துவத்தை விட இது மாதிரியான விளையாட்டுகள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்பதை அடிப்டையாகக் கொண்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் முதன்முறையாக சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி  நடைபெறுகிறது. நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு கால்பந்தாட்டத்தை தொடங்கி வைத்தார். 

மேலும் இதன் நிறைவு விழா மாலை 5.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் விளையாட்டு மற்றும் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு நிறைவு உரையாற்றவுள்ளார்.