ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் கேம்ரூன் அணியை 1-0 என வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் அர்ஜெண்டினா, ஜெர்மனி ஆகிய கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட பெரிய அணிகள் முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிறிய அணியான சவுதி அரேபியா அர்ஜெண்டினாவை தோற்கடித்து சர்ப்ரைஸ் செய்தது. இப்படியாக இந்த உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமாக நடந்துவருகிறது. இன்னும் பல சர்ப்ரைஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

FIFA World Cup 2022: களைகட்டும் கால்பந்து உலக கோப்பை..! பெரிய அணிகள் அதிர்ச்சி தோல்வி.. அசத்தும் சிறிய அணிகள்

இன்று இரவு கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி கானாவை எதிர்கொள்கிறது. இன்று சுவிட்சர்லாந்து - கேம்ரூன் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், சுவிட்சர்லாந்து வீரர் ப்ரீல் எம்பாலோ ஒரு கோல் அடித்தார். அதன்பின்னர் ஒரு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

ரசிகரின் செல்ஃபோனை தட்டிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 2 ஆட்டங்களில் ஆட தடை, ரூ.50 லட்சம் அபராதம்

கேம்ரூன் அணி அடிக்க முயன்ற ஒரு கோலை அபாரமாக தடுத்தார் சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் யான் சோமர். அதன்பின்னர் கேம்ரூன் அணி எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.