ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. 

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இன்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. 22வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடக்கிறது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது. 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கத்தாரில் 8 மைதானங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.இன்று நடக்கும் முதல் போட்டியில் கத்தார் - ஈகுவேடார் அணிகள் மோதுகின்றன.

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பார்க்க ரூ.23 லட்சத்துக்கு தனி வீடு வாங்கிய கேரள கால்பந்து ரசிகர்கள்

அதற்கு முன்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கோலாகல தொடக்க விழா நடந்தது. நடன நிகழ்ச்சிகள், பிரபல பாப் பாடகர் பிடிஎஸ் இசைக்குழுவின் இசைக்கச்சேரி ஆகியவை நடந்தன. கத்தார் நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன.

FIFA World Cup:கொல்கத்தாவில் களைகட்டும் ஜெர்சி,கொடி விற்பனை! விருப்பவீரர்களின் ஜெர்சியை வாங்க ரசிகர்கள் ஆர்வம்

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஃபிஃபா உலக கோப்பை திருவிழா கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் இந்த தொடரை நடத்தும் கத்தாரும் ஈகுவேடாரும் மோதுகின்றன.