ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை காலிறுதியில் போர்ச்சுகலை 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று மொராக்கோ அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஃபிரான்ஸ், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரேசில், மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காலிறுதி சுற்றில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. போர்ச்சுகல் - மொராக்கோ அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டி இன்று நடந்தது.

FIFA World Cup 2022: காலிறுதி போட்டியின் முதல் பாதியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட ரொனால்டோ.! இதுதான் காரணம்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிசர்லாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க லெவனில் ரொனால்டோ ஆடாதது அதிர்ச்சியளித்த நிலையில், இன்று நடந்த காலிறுதி போட்டியிலும் மொராக்கோ அணிக்கெதிராக ரொனால்டோ முதல் பாதியில் களமிறக்கப்படவில்லை. முதல் பாதியில் போர்ச்சுகல் அணி கோல் அடிக்கவில்லை. ஆனால் மொராக்கோ வீரர் யூசெஃப் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

முதல் பாதி முடிவில் 1-0 என மொராக்கோ முன்னிலை வகித்தது. 2ம் பாதியில் ரொனால்டோ களமிறங்கினார். ஆனால் போர்ச்சுகல் அணியால் 2ம் பாதியில் எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. கடைசிவரை கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மொராக்கோ அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

FIFA World Cup: பரபரப்பான காலிறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணி தொடரை விட்டு வெளியேறியது. தோற்றபின் கண்கள் கலங்கியபடி களத்திலிருந்து வெளியேறினார் ரொனால்டோ. அவர் கண் கலங்கியதை கண்ட ரசிகர்களின் மனமும் கலங்கியது.