FIFA World Cup 2022: கடைசி நேரத்தில் 2 கோல்கள் அடித்து வேல்ஸ் அணியை வீழ்த்தி ஈரான் அபார வெற்றி

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் 2 கோல்கள் அடித்து ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 

fifa world cup 2022 iran beat wales by 2 0 goals

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று 4 போட்டிகள் நடக்கின்றன. இன்று நடந்த முதல் போட்டியில் செர்பியாவை வீழ்த்தி 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி பெற்றது.

அதன்பின்னர் நடந்த 2வது போட்டியில் க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன. ஆனால் முதல் பாதி முழுக்க இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.

அல்லாவை வணங்குங்கள்; கால்பந்தை அல்ல! FIFA World Cup-ல் மூழ்கிக்கிடக்கும் கேரளாவிற்கு இஸ்லாமிய அமைப்பு அறிவுரை

2ம் பாதியிலும் இரு அணிகளும் முயற்சி மட்டுமே செய்தன. ஆனால் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 90 நிமிடங்களும் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டன. வேல்ஸ் கோல்கீப்பர் வைன் ஹென்னிசேவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் கோல்கீப்பர் மாற்றப்பட்டார்.

FIFA World Cup 2022: 5 கால்பந்து உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர்! கிறிஸ்டியானா ரொனால்டோ வரலாற்று சாதனை

கடைசியாக வழங்கப்பட்ட 9 நிமிடத்தில் ஈரான் அணி அபாரமாக ஆடி 2 கோல்கள் அடுத்தடுத்து அடித்தன. ரூஸ்பே செஷ்மி முதல் கோலை அடிக்க,ராமின் ரெஸைன் 2வது கோலை அடிக்க, 2-0 என ஈரான் த்ரில் வெற்றி பெற்றது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios