ஒற்றை செய்கையில் கோலா கம்பெனிக்கு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்திய ரொனால்டோ..! தரமான சம்பவம் வீடியோ
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோவின் ஒற்றை செயலால் கோக்க கோலா கம்பெனிக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
யூரோ கால்பந்து தொடர் நடந்துவருகிறது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஹங்கேரி அணிக்கு இடையேயான போட்டியில் போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோ அடித்த 2 கோல்கள் உட்பட மொத்தம் அணி 3 கோல்கள் அடிக்க, 3-0 என்ற கோல்கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், போர்ச்சுகல் ஜாம்பவான் வீரரான ரொனால்டோவின் செயல் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அமர, அந்த மேஜையில் ஸ்பான்ஸரான கோக்க கோலா பாட்டில்கள் இரண்டும், ஒரு தண்ணீர் பாட்டிலும் இருந்தது. அதைக்கண்ட ரொனால்டோ, கோக்க கோலா பாட்டில்களை எடுத்து ஃப்ரேமிலேயே இல்லாதபடி ஓரமாக வைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை, இது போதும் என்பது போல கையில் உயர்த்தி காட்டினார்.
ரொனால்டோவின் இந்த செயலால் கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்(29 ஆயிரம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரொனால்டோவின் இந்த செயல் கோலா நிறுவனத்துக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதுடன், மரண அடியாக விழுந்துள்ளது.