அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் மாரடோனா உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அர்ஜென்டினாவில் உள்ள லா பிளேடாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தார்.

ஆல்டைம் பெஸ்ட் கால்பந்து வீரரான மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 1982, 1986, 1990, 1994 ஆகிய 4 கால்பந்து உலக கோப்பையில் விளையாடினார். 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராகவும் செயல்பட்டார்.