ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி... கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மொரோக்கோ அணி!!
கனடா அணிக்கு எதிரான போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றிபெற்றதோடு குரூப் எஃப் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
கனடா அணிக்கு எதிரான போட்டியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணி வெற்றிபெற்றதோடு குரூப் எஃப் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. குரூப் எஃப் பிரிவில் உள்ள குரோஷியா - பெல்ஜியம் அணிகளுக்கும், கனடா - மொராக்கோ அணிகளுக்கும் ஒரே நேரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. ஆனால் மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
இதையும் படிங்க: துனிசியாவிடம் ஃபிரான்ஸ் அதிர்ச்சிதோல்வி! டென்மார்க்கை வீழ்த்தி அடுத்தசுற்றுக்கு முன்னேறிய ஆஸி.,
இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்திலேயே மொராக்கோ அணி முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே மோராக்கோ அணியின் அடுத்த கோலையும் அடித்து அசத்தியது. இதன் மூலம் மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதை அடுத்து மொராக்கோ அணி ஒரு கோலை அடித்து பதிலடி கொடுக்க முயற்சித்தது. இதனால் முதல் பாதி ஆட்ட நேரம் 2-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி பரபரப்பான போட்டி டை! பெங்களூருவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்
இதை தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதல் ஆட்ட நேர முடிவ் வரை கோல்கல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு குரூப் எஃப் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. இதன் மூலம் குரூஃப் எஃப் பிரிவில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதுமட்டுமின்றி மொராக்கோ அணி 2வது முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு 36 ஆண்டுகளுக்கு பின் முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.