கோல்டன் குளோப் விருதை பெற்றது நாட்டு கூத்து பாடல்… பாடலை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!!
கோல்டன் குளோப் விருதை பெற்ற நாட்டு கூத்து பாடல் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கோல்டன் குளோப் விருதை பெற்ற நாட்டு கூத்து பாடல் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் என்னும் பகுதியில் 80 ஆவது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை பாடலின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'வாரிசு' படத்தின் கதையும் 'காலேஜ் ரோடு' படத்தின் கதையும் ஒன்னு தான்! புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்!
நாட்டுக் கூத்து பாடலை எழுதியவர் யார்?
நாட்டுக் கூத்து பாடலை பிரபல தெலுங்கு பாடலாசிரியரும் பாடகருமான சந்திரபோஸ் எழுதியுள்ளார். இவரது முழுப்பெயர் கனுகுந்த்லா சுபாஷ் சந்திரபோஸ். சந்திரபோஸ் 1995 ஆம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். 27 வருட கால வாழ்க்கையில், 850க்கும் அதிகமான படங்களில் சுமார் 3,600 பாடல்களை எழுதியுள்ளார். ஒரு பாடலாசிரியராக, சந்திரபோஸ் இரண்டு மாநில நந்தி விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு சைமா (SIIMA) விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: 'வாரிசு' படத்திற்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ்..! இயக்குனரின் இந்த கணக்கு சொதப்பிடுச்சோ?
நாட்டுக் கூத்து பாடலைப் பாடியவர் யார்?
நாட்டுக் கூத்து பாடலை ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால் பைரவா இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2021 ஆம் ஆண்டு நவ.10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. முழுமையான வீடியோ பாடல் 2022 ஆம் ஆண்டு ஏப்.11 ஆம் வெளியிடப்பட்டது. இதே பாடலின் தமிழ்ப் பதிப்பு நாட்டு கூத்த, கன்னடத்தில் ஹள்ளி நாடு, மலையாளத்தில் கரிந்தோல் மற்றும் ஹிந்தி பதிப்பில் நாச்சோ நாச்சோ என வெளியிடப்பட்டது. இந்த பாடலின் வீடியோவில் படத்தின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடனமாடியுள்ளனர். பாடலின் நடனத்தை பிரேம் ரக்ஷித் இயக்கியுள்ளார்.
நாட்டுக் கூத்து பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள், அதன் தெலுங்கு பதிப்பு 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் இந்த பாடல் பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலவரப்படி, அனைத்து மொழிகளிலும் 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.