தேனியில் ஜெயிக்கப்போவது யார்? அலசி ஆராய்ந்ததில் திடீர் திடீர் திருப்பம்!!

தேனி பாராளுமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ஓபிஆர் களமிறங்கி இருப்பதால் ஸ்டார்  தொகுதியாக மாறிவிட்டது.  அதற்கும் மேலாக ஓபிஎஸ் மகனை தோற்கடிக்க  பலமான வேட்பாளரை களமிறங்கியுள்ளார்.

Who will win in Theni Constituency

தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியல்  வெளியாகி உள்ளது. அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.  அமமுக சார்பாக தேனி தொகுதியில்  தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கியுள்ளதால் ஓபிஎஸ் கேங் மிகுந்த மனவுளைச்சலில் இருக்கிறதாம்.

2016 சட்டமன்ற தேர்தலில் இவர் அங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை மீண்டும் அதே தொகுதியில்  இவர் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். 

Who will win in Theni Constituency

ரவீந்திரநாத்க்கு தற்போது ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். தேனி ஓபிஎஸ் தொகுதி என்பதால் அங்கு அவரின் மகன் களமிறக்கப்பட்டுள்ளார். களத்தில் உள்ளது ஓபிஎஸ் மகன் இந்த தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.  ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் தனது மகனுக்கு சீட் கொடுத்துள்ளதைக்கண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் சமூகத்தினர் மட்டுமே உற்சாகத்தில் உள்ளனர் ஆனால், ராஜன் செல்லப்பா மற்றும் செல்லூர் ராஜு டீம் பயங்கர அப்செட்டாம். 

சொந்த கட்சியில் இப்படி அதிருப்தியில் இருப்பவர்கள் உள்ளடி வேலைகள் செய்வது ஒருபுறமிருக்க, நேரடியாக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்க மிக வலிமையான வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை தினகரன் களமிறக்கி இருக்கிறார் என்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டார்கெட் என்னன்னா? திமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஓபிஎஸ் மகன் ஜெயிக்கக்கூடாது. இது மானப்பிரச்சனை. மொத்தமா வாஸ் அவுட் ஆனாலும் இந்த ஒரு தொகுதி ஜெயிச்சாலே பாதி ஹேப்பி கெடச்சிடும் என சொல்லியிருக்கிறாராம். 

Who will win in Theni Constituency

தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையானோர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மறவர், நாயக்கர், கவுண்டர், செட்டியார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் கிறிஸ்தவர், முஸ்லீம் மக்களும் கனிசமாக வாழ்ந்து வருகிறார்கள். 

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தனது  சமுதாய வாக்கு வங்கி இருக்கும் தைரியத்தில் தன் மகன் ரவீந்திரநாத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார்.  நாம ஜெயிக்கலானாலும் பரவால்ல, ஓபிஎஸ் மகனுக்கு முக்கிய சில இடங்களில் விழும் வாக்குகளும், அதிருப்தியில் உள்ளவர்களை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக திருப்பி விடவும் பிளான் போட்டுள்ள அவர், அமமுக சார்பில் களத்தில் ஆண்டிபட்டி தங்கத்தை களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதால் ஓட்டுக்கள் சிதற போகிறது என்ற பீதியில் இருக்கிறாராம் ஓ.பி.எஸ். 

Who will win in Theni Constituency

தேனியில், ஓபிஎஸ் மகன் களமிறங்குவதால் பணம் விளையாடும், சொந்த செல்வாக்கு, கட்சி வாக்கு, கட்சியின் சின்னம் என இருப்பதால் ரிஸ்க் எடுக்க தயங்கிய திமுக, கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலையில் கட்டி விட்டது. ஆனால், ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க மொத்த  பிளானையும் தினகரன் தீட்டுவதால், காசே செலவு பண்ணாமல் காங்கிரஸ் ஜெயித்துவிடும் சூழல் அமைந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios