சேலம் தொகுதியில் ஜெயிக்கப்போவது யார்? அலசி ஆராய்ந்ததில் சுவாரஷ்யம்... செம்ம டிவிஸ்ட்!

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு 40 ல் பாதியை, அதாவது படு தோல்வி அடைவோம் என நினைத்த தொகுதிகளை தலையில் கட்டிவிட்டு பக்காவாக பார்த்து பார்த்து எடுத்த  20  தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது. இந்த தொகுதியை முழுமையாக அலசி ஆராய்ந்ததில் பல சுவாரஷ்யத் தகவல்கள் கிடைத்துள்ளது.

Who will be Win In Salem Constituency

நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு 40 ல் பாதியை, அதாவது படு தோல்வி அடைவோம் என நினைத்த தொகுதிகளை தலையில் கட்டிவிட்டு பக்காவாக பார்த்து பார்த்து எடுத்த  20  தொகுதிகளில் மட்டுமே களம் காண்கிறது. இந்த தொகுதியை முழுமையாக அலசி ஆராய்ந்ததில் பல சுவாரஷ்யத் தகவல்கள் கிடைத்துள்ளது.

20 தொகுதிகளில் முக்கியமான தொகுதியில் சேலம் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி என்றே சொல்லலாம்.  திமுக-அதிமுக என இரண்டுமே நேருக்கு நேராக மோதுகின்றனர்.  திமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.ஆர் பார்த்திபன் தேமுதிகவில் இருந்து வெளியே வந்தவர். அக்கட்சியிலிருந்து அதிருப்தியால் வெளியேறி கருணாநிதி முன்பு திமுகவில் இணைந்தார். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இவர் கட்சிக்கு காட்டிய விசுவாசம்தான் இன்றைக்கு திமுக தலைவர் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கோ, அவரது மகன் வீரபாண்டிய ராஜாவிற்கு கூட கொடுக்காமல் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Who will be Win In Salem Constituency

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் செல்லபிள்ளையாக இருந்த  வீரபாண்டிய ஆறுமுகம்தான், கெத்தாக வலம் வந்த அவர் சேலத்தை திமுக கோட்டையாக வைத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது மகன் மகன் வீரபாண்டிய ராஜா தந்தை அளவுக்கு வலம் வர முடியவில்லை. இதனால்தானோ என்னவோ பார்த்திபனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. வேறு ஒரு கட்சியில் இருந்து வந்த பார்த்திபனுக்கு சீட் தந்துள்ளதால், ராஜா தரப்பு எந்த அளவுக்கு பார்த்திபனுக்கு ஒத்துழைப்பு தரும் என தெரியவில்லை, ஆனால் இந்த தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க பார்த்திபனுக்கு வேலை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் வீரபாண்டி ராஜா கோஷ்டியினர். அதிமுக மீது உள்ள திருப்தியிலும், மத்திய, மாநில அரசுகளால் மக்களின் அதிருப்தி எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு சாதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இது போக, தனது சொந்த செல்வாக்கு மற்றும் தேமுதிகவிலிருந்து வந்ததால் இவருக்கு தேமுதிக முக்கிய புள்ளிகள் மறைமுகமாக வேலைபார்ப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Who will be Win In Salem Constituency

அதிமுக கூட்டணியில் வேட்பாளர் சரவணன் களமிறங்கி உள்ளார். இது  முதல்வரின் சொந்த தொகுதி என்பதால், சரவணன் ஜெயித்தே ஆக வேண்டும் என கட்டாயத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த ஊரில் ஜெயிக்கலைன்னா அது எதிர்காலத்தில் தலைவலியை உண்டாக்கும் என்பதால், முக்கிய சில அமைச்சர்கள் மற்றும் சொந்தக்காரர்களை களத்தில் இறக்கி  வேலைகள் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இதை தவிர ஆளும் தரப்பின் பண பலம், ஆள் பலம் சொந்த செல்வாக்கு இந்த தேர்தலில் வெளிப்படும் என சொல்லப்படுகிறது. 

இதெல்லாம் ஒருபுறமிருக்க, அமமுக சார்பாக வேட்பாளராக போட்டியிடவுள்ளவர் வீரபாண்டி செல்வம், அதிமுகவை அலறவிடுவதும், எடப்பாடி பழனிச்சாமியின் டொஊக்கத்தை கெடுப்பதும் இவர் தான். இவர் வாங்கும் ஒவ்வொரு ஓட்டும், திமுகவை வெற்றிக்கு அழைத்து செல்லும். அதிமுகவின் வாக்குகளை கிளை கிளையாக அலேக்காக அள்ளுவார். ஓபனாக சொல்லனும்னா திமுக எஸ்.ஆர்.பார்த்திபனை ஜெயிக்கவைக்கப்போவதே இவர்தான்.

Who will be Win In Salem Constituency

இவர் யார் தெரியுமா? அன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட்டபோது, வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டவர். ஆனால் தோற்றது மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான்.  ஜெயலலிதா மறைந்தவுடன், ஓபிஎஸ் அணியில் இருந்த இவர், பிறகு தினகரனுடன்  சென்றுவிட்டார். இவரால்தான் எடப்பாடியை சொந்த ஊரில் அசிங்கப்படுத்தமுடியும் என ஆள் பார்த்து நிற்க வைத்துள்ளாராம் தினகரன்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios