Asianet News TamilAsianet News Tamil

திண்டுக்கல் தொகுதியில் ஜெயிக்கப்போவது யார்? பாமக தலையில் கட்டிய அதிமுக!! கோட்டையை அனாமத்தா பறிகொடுக்கும் கொடுமை...

இதுவரை யாருக்குமே திண்டுக்கல் தொகுதியை  கொடுக்காத அதிமுக, முதல்முறையாக பாமகவுக்கு ஒதுக்கியுள்ளதும், முதல்முறையாக திண்டுக்கல்லில் பாமக களம் இறங்குவதும் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது! 

Who will be win in Dindukal
Author
Chennai, First Published Mar 19, 2019, 6:19 PM IST

இதுவரை யாருக்குமே திண்டுக்கல் தொகுதியை  கொடுக்காத அதிமுக, முதல்முறையாக பாமகவுக்கு ஒதுக்கியுள்ளதும், முதல்முறையாக திண்டுக்கல்லில் பாமக களம் இறங்குவதும் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது! 

 எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்து ஆரம்பித்து முதன்முதலில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது  திண்டுக்கல் தொகுதி என்பதால் செண்டிமெண்ட் காரணமாக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை கொடுத்ததே இல்லை. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியை பாமகவிற்கு கொடுத்துள்ளது. அதிமுக அசால்ட்டா  ஜெயிக்க வேண்டிய தொகுதி இப்படி, தேவையில்லாமல் தாரைவார்த்துள்ளதே என தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

திண்டுக் கல்லில் போட்டியிட கட்சி நிர்வாகிகளுக்கு கடும் போட்டி நிலவியதே இதற்கு காரணம். கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா அல்லது மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்குத்தான் திண்டுக்கல் ஒதுக்கப்படும் என கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர். பாமக வெளியிட்ட முதல் பட்டியலில் சென்னை மத்திய தொகுதி வேட்பாளர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த திலகபாமாவுக்கு திண்டுக்கல்லை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவருக்கு சீட் இல்லை என முடிவானது. அடுத்ததாக பாமக  துணைத் தலைவராக உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சீட் என சொல்லிவந்த நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்ட வேலுச்சாமிக்கு சீனிவாசன் தூரத்து சொந்தம் என்றும், தொழில் ரீதியாக இருவருக்கும் தொடர் புள்ளதாக கட்சித் தலைமையிடம் சிலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Who will be win in Dindukal

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட அரசப்பபிள்ளைபட்டியைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச் செயலாளர் ஜோதிமுத்து வேட்பாளராக  அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக முதல்முறையாக பின்வாங்கல் ஏன்? 

இதுவரை அதிமுகவின் கோட்டையாக விளங்கிய திண்டுக்கல் தொகுதியை அனாமத்தாக  பாமகவிடம் பறிகொடுத்துள்ளது அதிமுக. காரணம் கேட்ட அதிமுகவினர் ஏகத்துக்கும் கடுப்பில் உள்ளார்களாம். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இவர்கள் இருவருமே தங்கள் சொந்தக்காரர்களுக்கு சீட் கேட்டு எடப்பாடி - ஓபிஎஸ்ஸை நச்சரித்தார்களாம், இவர்கள் இரண்டுபேருக்கும் கொடுக்காமலேயே,  கோஷ்டி பூசலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பாமகவுக்கு இந்த தொகுதியை ஒதுக்கி விட்டார்களாம். 

Who will be win in Dindukal

இதில், என்ன பரிதாபம்ன்னா, வட மாவட்டங்களில் மட்டுமே கொஞ்சம் வாக்குகளை வைத்திருக்கும்  பாமகவுக்கு  தென் மாவட்டங்களில் சுத்தமா ஒண்ணுமே கிடையாது. இது ஒரு பக்கம் இருக்க, நத்தம் கோஷ்டி சீட் கிடைக்கல என்கிற காண்டில், தேர்தலில் உள்ளடி செய்யவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல சீனிவாசனின் கோஷ்டி இதைவிட மோசம் யார் ஜெயிச்சா நமக்கென்ன என சைலண்ட்டாகவே இருக்கிறார்களாம். செல்வாக்கே இல்லாத திண்டுக்கல்லை பாமகவுக்கு  கொடுத்துவிட்டு அனாமத்தா ஒரு தொகுதியை இழந்துள்ளது.

துள்ளிகுதிக்கும் திமுக; அதிமுக பின் வாங்கியதாலும், உள்கட்சி கோஷ்டி பூசலால் திமுக தெம்பாக உள்ளது. வேலுச்சாமி என்பவரை இக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.  வேலுச்சாமி பாமக ஜோதிமுத்து  இருவரும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாயிகள். 

இதுவரை அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல்லில் எப்படியாவது வெற்றிக்கொடி நாட்டிவிட முக்கிய புள்ளிகளை களமிறக்க உள்ளது திமுக. அதிமுகவில் பெருசா டஃப் பைட் கொடுக்க வாய்ப்பில்லை என்பதாலும், ஈஸியா ஜெயிக்க அதிமுக வழி விட்டுள்ளதால் திமுக கொண்டாட்டத்தில் உள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios