செம்ம கெத்தாக வந்துட்டாரு கேப்டன்... நச்சுனு நாலே வார்த்த தான்!! உற்சாக வெள்ளத்தில் தொண்டர்கள்...
கடைசி நேரத்தில் கேப்டனை இறக்கிவிட்டு, பல மாத ஏக்கத்தை மொத்தமாக மறக்கடித்த தேமுதிகவின் வியூகம் கைகொடுத்துள்ளது தொண்டர்களின் எல்லையில்லா உற்சாகத்தில் கண்கூடாக தெரிகிறது.
கடைசி நேரத்தில் கேப்டனை இறக்கிவிட்டு, பல மாத ஏக்கத்தை மொத்தமாக மறக்கடித்த தேமுதிகவின் வியூகம் கைகொடுத்துள்ளது தொண்டர்களின் எல்லையில்லா உற்சாகத்தில் கண்கூடாக தெரிகிறது.
வழக்கம் போல விஜயகாந்த் தன்னுடைய வெள்ளை சட்டை, வேட்டி, கூலிங் கிளாஸ், விபூதி என அதே பழைய கெத்தான கெட்டப்பில் வந்து பிரச்சார வேனின் முன் சீட்டில் அசத்தலாக அமர்ந்தார்.
பிரசார வேனுக்கு முன்னும் பின்னும் சுமார் 300 க்கும் மேற்பட்ட டூ-வீலரில் தேமுதிக கொடிகளை கட்டிக்கொண்டு தொண்டர்கள் பயணித்தனர். பல மாதங்கள் கழித்து விஜயகாந்த்தைக் காண தொண்டர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் திரண்டுவந்து விஜயகாந்த்தைப் பார்த்தனர். பொதுமக்களை பார்த்த குஷியில் விஜயகாந்த் கையசைத்தார்.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பிரசாரம் செய்ய மாட்டார் என சொல்லப்பட்டது. அனால் தேமுதிக தொண்டர்களோ கேப்டனைக் காணாமல் சோகத்தில் மூழ்கினர். அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் கடைசி நேரத்தில் வெப்பாலை கண்ணில் காட்டும் முயற்சித்ததில், கண்ணில் காட்டினால் மட்டும் போதாது பிரசாரமும் செய்யவைக்க முயற்சியில் இன்று அவர், மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகளின் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்கள். தொண்டர்களின் ஆரவாரத்திற்கு இடையே தெளிவாக பேசிய, அவருடைய குரலை கேட்டு தொண்டர்கள் உற்சாகமாக இருந்தனர்.