விஜயகாந்த்தை கடைசி நேரத்தில் வாஷ் அவுட் பண்ணிய பிரேமலதா சுதீஷ்!!
ஒரே நேரத்தில் இரண்டு கட்சியில் கூட்டணி பேரம் பேசிய தேமுதிகவை சமயம் பார்த்து வாஷ் அவுட் செய்து தேமுதிகவை கதிகலங்க விட்டுள்ளனர் அதிமுக தலைகள்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது.
கட்சி துவங்கிய சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் மாற்று அணி என யாருடனும் அணி சேராமல் தனித்தே போட்டியிட்டார் விஜயகாந்த். கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என அறிவித்ததோடு, 232 தொகுதிகளில் தனித்து போட்டியிடவும் செய்தார். மேலும் பாமகவின் கோட்டை என சொல்லப்படும் விருதாச்சலத்தில் போட்டியிட்டு வென்றார். 231 தொகுதிகளிலும் தேமுதிக தோற்றது. ஆனால் தேமுதிகவின் வாக்குகள் பெரும் அந்த தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு கணிசமாக இருந்தது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இந்த தேர்தலில் தேமுதிக பிரித்த வாக்குகள் அதிமுகவை அரியணை ஏற விடாமல் தடுத்தது. திமுக பெரும்பான்மை பெற முடியாத சூழலையும் ஏற்படுத்தியது. அந்தளவு 128 தொகுதிகளில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தது தேமுதிக. இந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 8.45 சதவீதம். முதல் முறை தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சி இந்த அளவு வாக்குகளை பெறுவது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது.
006 சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2009 நாடாளுமன்ற தேர்தலின் போது பலமிக்க கட்சியாக இருந்தது தேமுதிக முதல் தேர்தலில் மக்கள் தந்த ஆதரவை அப்படியே தக்க வைத்திருந்தார் விஜயகாந்த். "கடவுளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி" என மீண்டும் அறிவித்து தனித்தே தேர்தலை சந்தித்தார். 2006ல் தேமுதிக. பெற்ற வாக்குகள் நிறைய கூட்டணி வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அத்தனையையும் விலக்கி விட்டு தனித்து தேர்தலை சந்தித்தார்.
அந்த தேர்தலில் ஒரு இடங்களில் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை. அவ்வளவு ஏன் ஒரு தொகுதியில் கூட டெபாசிட்டையும் பெறவில்லை. ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்திருந்தது. முதல் தேர்தலில் 8.45 சதவீத வாக்குகளை பெற்ற தே.மு.தி.க. இந்த தேர்தலில் 10 சதவீதத்தை எட்டி இருந்தது. இடைத்தேர்தல்களையும் புறக்கணிக்காமல் சந்தித்தது. எல்லா தேர்தல்களிலும் மூன்றாவது பெரிய கட்சி என்பதை தக்க வைத்துக்கொண்டது.
தொடர்ச்சியாக வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துக்கொண்டே போனது. அது மகிழ்ச்சியை அளித்தாலும், வெற்றியை சந்திக்காதது கட்சியினரிடையே சோர்வை ஏற்படுத்தியிருந்தது."வெற்றி பெற வேண்டுமானால் கூட்டணி அவசியம். நாம் ஏன் கூட்டணி அமைக்க கூடாது' என கட்சிக்குள்ளேயே பேச்சு எழத்துவங்கியது. "தனித்து நின்றால் ஓரிரு இடங்களில் தான் வெல்ல முடியும். 10 சதவீத வாக்கு வங்கியை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தலாம். ஆனால் கூட்டணி அமைத்தால் கணிசமான எம்.எல்.ஏ..க்களை பெற்று விடலாம்' என மேல் மட்ட அளவில் ஆலோசனை சொல்லப்பட்டது.
இதை தனக்கு சாதகமாக்கி கொண்டார் ஜெ. அகில இந்திய தலைவர்களை மட்டுமே தனது இல்லத்துக்கு அழைத்து பேசும் ஜெயலலிதா, விஜயகாந்த்தை போயஸ் கார்டனுக்கு அழைத்து கூட்டணிக்கு அச்சாரமிட்டார். திருமண மண்டப இடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் திமுகவை கடுமையாக எதிர்த்த விஜயகாந்த், பொது எதிரியாக திமுக.வை நிறுத்தி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வென்றிருந்தது. ஆனால் குறைந்த இடங்களில் போட்டியிட்டதால் வாக்கு சதவீதம் 7.88 சதவீதமாக குறைந்திருந்தது. ஆண்ட திமுக. எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தவித்தது. இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்பட்டவர் விஜயகாந்த்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த தேமுதிகவின் கதி? உலக அரசியல் வட்டாரத்தில் இப்படி ஒரு கட்சியை யாரு பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்லணும், அந்த பாக்கியம் தமிழக மக்களுக்கு அடுத்தடுத்த நாட்களிலேயே கதை திரைக்கதை எழுதி காட்டியிருக்கிறது விஜயகாந்த்தின் தேமுதிக, மன்னிக்கணும் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷின் கண்ட்ரோலில் களங்கப்பட்டுக் கிடைக்கும் தேமுதிக.
தமிழக மக்கள் இதுவரை தேர்தலுக்கு தேர்தல் காசுக்காகவும், ஒன்னு ரெண்டு சீட்டுக்காகவும் பேரம் பேசும் கட்சிகளின், திரை மறைவில் நடந்த காட்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியுள்ளது. தேமுதிகவின் வரலாறு காணாத இந்த பயங்கரமான பேரம் தமிழக மக்களை அதிர வைத்துள்ளது. ஒன்னு ரெண்டு சீட்டு, அதுக்கு ஏத்த கொஞ்சம் துட்டுக்கு அங்குமிங்கும் அது அலை பாய்வது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் இப்படி மாறி மாறி பேரம் பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தலை சுற்ற வைத்து வருகிறது தேமுதிக.
கலைஞர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஜெயலலிதா மட்டும் உயிரோடிருந்தால் இப்படி ஆகியிருக்குமா? இப்படி வாலாட்டி இருப்பார்களா என அந்தந்த கட்சிக்கு காரர்களை காண்டாக்கிய சம்பவங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையை சொல்லனும்னா ஜெயலலிதா இருந்திருந்தால் நேரடியாகவே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசி துரத்தி அனுப்பியிருப்பார். போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லத்திற்கு வர அப்பாயின்மென்ட் கேட்டு கெஞ்ச விட்டிருப்பார்.
அதே போல தான் கருணாநிதியும் யாரையும் வீட்டிற்கு சென்று சந்திக்கும் வழக்கமே இல்லை செம்ம கெத்தாக வீட்டிலேயே இருந்துகொண்டு தெறித்து ஓடிவர விட்டிருப்பார்.
இப்படி இருக்கையில் வெறும் 2 லிருந்து 3 சதவிகிதம் வைத்து ஆட்டம் காட்டும் இந்த தேமுதிகவை கண்டுக்காமல் விட்டிருப்பார்கள். ஆனால், தற்போது இருக்கும் சூழலில் அதிமுக தலைமையை கெஞ்ச வைத்துவிட்டாரே விஜயகாந்த் என்று அந்த கட்சி தொண்டர்களும், கடைசியில் இப்படி காத்திருந்தும் வெறும் 2 தான் கொடுக்க முடியும் என சொன்னதும் தேமுதிக தொண்டர்களும் வெறுப்பில் இருந்தனர். இந்த நிலையில்தான் அதிரடியாக திமுக மூலம் தேமுதிகவின் ரகசிய முகம் அம்பலமாகி நாறடித்துவிட்டது.
கூட்டணியில் தேமுதிக கட்டாயம் இடம்பெறும் என்று ஓபிஎஸ் சொல்லியிருந்தார். தமிழிசையும் உறுதியாக கூறியிருந்தார். இந்நிலையில் பரபரப்பு திருப்பமாக... பாஜக பொதுக்கூட்ட மேடையில் இருந்த விஜயகாந்தின் படம் அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தமிழிசை போட்டோ வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல தேமுதிக கொடிகளும் அகற்றப்பட்டுள்ளன. பேனர்களும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இந்த பரபரப்பான சூழலில் திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேசி ஒரே நேரத்தில் இரு முக்கிய கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கொஞ்சம் நஞ்சம் இருந்த பெயரை கெட்டப் பெயராக்கியிருக்கிறது தேமுதிக.