மெர்சல் சர்க்கார் படத்துக்கு பெரும் பிரச்சனை பண்ண அதிமுக பிஜேபி கூட்டணிக்கு எதிராக திமுக அணிக்கு நடிகர் விஜய் ஆதரவு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறுகிறபோதெல்லாம் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், துணை நடிகர்கள் பிரச்சாரங்களில் பங்கெடுப்பது வழக்கம்.

ஜெயலலிதா, கலைஞர் இருவரும் தமிழக அரசியலில் உயிர்ப்புடன் இருந்தவரை திரைத் துறையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவந்தது. இருவரின் மறைவுக்குப் பின் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் களம். கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து வேட்பாளர்கள் தேர்வு நடத்தி வருகிறார்.  

விஜய் ஏற்கனவே 2011 ஆண்டு நடந்த அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பணிகளில் பங்கெடுத்தது, அப்போது அதிமுக வெற்றிபெற்றதால் அதிமுக வெற்றிக்கு அணில் போல உதவியதாக விஜய் அறிக்கை விட்டிருந்தார். அதன் பின் ஒரு வருடம் ஆன நிலையில் தலைவா படம் வெளியாவதற்கு ஜெயலலிதா அரசு தடையாக இருந்தது. அப்படம் பல்வேறு சிக்கல்களுக்குப் பின் படம் ரிலீஸ் ஆனது.

 விஜய் ரசிகர்கள் தங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத இந்த சம்பவம் நடக்கும் வரை அதிமுகவிற்கு எந்த இடைஞ்சலும் செய்யவில்லை, இந்த நிகழ்வுக்குப் பின் அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மெளனம் காத்த விஜய் ரசிகர்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தங்கள் மௌனத்தைக் கலைத்து நேரடியாகவே ஆதரவு கொடுத்துள்ளனர்.

நேற்று முன் தினம் தினம் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து  ஆதரவை தெரிவித்துள்ளார் விஜய் ரசிகர் மன்ற மதுரை மாவட்ட பொறுப்பாளர் தங்கப்பாண்டி.  இந்த நிகழ்வானது அதிமுக பிஜேபி வட்டாரத்தை மண்டைகாயை வைத்துள்ளது.

இதுகுறித்து, தங்கபாண்டி; மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம், தேர்தலில் திமுக அணிக்கு ஆதரவை என கேட்டதற்கு, “வாழ்த்து தெரிவிப்பதே ஒரு வகையான ஆதரவுதானே எனக் கூறினாராம்

அதுமட்டுமல்ல, தலைமை அனுமதி பெற்று வாழ்த்து தெரிவித்தீர்களா என்ற போது நல்ல விஷயங்களுக்கு தலைமை எப்போதும் தடை போட்டதில்லை என்று  டோன்னாராம் தங்கப்பாண்டி.

அதிமுக - பிஜேபிக்கு ஆதரவு இல்லை என்பதில் தீர்க்கமாக உள்ளார்களாம். அவர்களை தோற்கடிக்கும் பலம் திமுக அணிக்கு மட்டுமே தமிழகத்தில் உண்டு என்பதால் உடனடியாகவே விஐய் ரசிகர் மன்றத்தின் ஆதரவு யாருக்கு என்பதை கோடிட்டு காட்டும் நிகழ்வுதான் மதுரையில் வெங்கடேசனை விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கப்பாண்டியன் நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார். இதனைத் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு சாம்பிள் தான் என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.