எங்கள் கூட்டணியின் அனைத்துக் கட்சி தொண்டர்களும் உற்சாகமாக உள்ளார்கள். 40 லோக்சபா தொகுதிகளிலும், 21 சட்டசபை தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறுவோம்:     அன்புமணி.

(அண்ணே! ‘திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை, ஊழல் எடப்பாடி அரசின் முகத்திரையை கிழிப்பதே பா.ம.க.வின் நோக்கம்!’ அப்படிங்கிற மாதிரியான அதே அர்த்தத்துல இந்த ஸ்டேட்மெண்ட்ஸையும் எடுத்துக்கலாம் தானே?)

*    அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியானது வெற்றிக் கூட்டணி. ஆனால் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியானது ஊழல் கூட்டணி! மத்தியில் ஆண்ட காங்கிரஸ் பல ஊழல்களை செய்தது. ஆனால், பி.ஜே.பி. மீது ஏதாவது ஊழல் நடந்ததாக குறை கூற முடியுமா?: மாஜி அமைச்சர் செம்மலை.

(ஓ.கே. பாஸு, உங்களோட வெற்றிக்கூட்டணியின் தலைவனான அ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்குதா இல்லையா?ன்னு அப்படியே அன்புமணி ராமதாஸ் பக்கம் திரும்பி ஒரு கேள்வி கேளுங்க, தல என்ன பதில் சொல்லுதுன்னு பாப்பம்)

*    விஜயகாந்தின் உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக, மரியாதை நிமிதமாக சந்தித்தோம். அவர் பூரண குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்: ஓ.பன்னீர்செல்வம். 

(தமாசு, தமாஸு!  சட்டசபையில உங்க மாண்புமிகு இதயதெய்வம் இருந்தப்பவே நாக்கை மடக்கி, விரலை நீட்டினவரை போயி எதுக்கு மரியாதை நிமித்தமாகவெல்லாம் சந்திக்கிறீங்க தல?  கட்சி ஆரம்பிக்காத ரஜினி வந்து பேசுனதையே ‘அரசியல் பேசப்பட்டது’ன்னு பிரேமலதா சொன்னது மறந்து போச்சா?)

*    நான் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கடைசி வரை கட்சிக்காக உழைப்பேன்: உதயநிதி. 

(இதையேதான் உங்க பெரியப்பாவும் சில வருஷமா சொல்லிட்டு இருக்காரு. ஆனா உங்கப்பா கேக்குற மாதிரி தெரியலையே தம்பி! அது சரி, அந்த ‘உங்களில் ஒருவனாக’ அப்படின்னு நீங்க சொல்றது, மாநில நிர்வாகிகளில் ஒருவனாக! அப்படின்னுதானே!?)

*    பி.ஜே.பி.யை நானும் முன்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். ஆனால், அவர்கள் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, நிறைய மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டுகிறார். இதனால் தான் தற்போது அவர்களை வரவேற்கிறேன்: தம்பிதுரை 

(சந்தானத்தோட காமெடி டயலாக் மாதிரியே பேசுறீங்களே தல. மாடுலேஷன் ஓ.கே. ஆனால் டயலாக் மட்டும் கொஞ்சம் மாத்தணும் இப்படி...’கொஞ்சநாளா நானும் மோடியை திட்டினேன். ஆனால், புகழ்ந்தால்தான் சீட்டுன்னு சொல்லிட்டாங்க! அதான் வேற வழியில்லாம நாக்கை மாத்திக்கிட்டேன். சீட்டு முக்கியமா, உண்மை முக்கியமா?ன்னு கேட்டால், சீட்டுதான் முக்கியமுன்னு கவுலி பல்லி சொல்லுது தம்பி;)