நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ப்பு... எனக்கு ஓட்டுப்போடுங்க! திருச்சியில் சென்டிமென்ட்டாக ஒட்டு கேட்கும் திருநாவு

https://static.asianetnews.com/images/authors/ea14f421-6212-5fd4-a5ec-f2773be89cf5.jpg
First Published 15, Apr 2019, 9:17 PM IST
Thirunavukarasar Sentiment speech at trichy
Highlights

நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ப்பு, யாரவது அவர்களுக்கு வாக்களிக்க நினைத்தால், அவர்கள் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ப்பு, யாரவது அவர்களுக்கு வாக்களிக்க நினைத்தால், அவர்கள் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி திருநாவுக்கரசரும், அதிமுக கூட்டணியில்  டாக்டர்.இளங்கோவனும், அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுக இங்கு போட்டியிடவில்லை. எனவே எம்.ஜி.ஆருக்காகவோ அல்லது ஜெயலலிதாவுக்காகவோ யாராவது ஓட்டுப்போட நினைத்தால்  அந்த ஓட்டை எனக்கே போடுங்கள். ஏனெனில் அந்தகாலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நான்தான் துணையாக நின்றவன். அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக எம்,ஜி.ஆர் வளர்த்த எனக்கு போடலாம் இல்லையா என்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவுக்கு தற்போது சரியான தலைவர்கள் இல்லை.  சரியான தலைமை ஆதரவற்ற நிலையில் உள்ள தொண்டர்களைப் பார்த்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறோம் என விளக்கம் அளித்தார்.

loader