அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி... போட்டோவை பாத்ததும் பீதியான தம்பிதுரை!!
கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கடந்த ஒரு மாசமாக தம்பிதுரை பிளான் போட்டு வந்துள்ள நிலையில், அந்த தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி போட்டியிட இருப்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அமைச்சரவையை முதல்வரான ஓபிஎஸ் அமைச்சரவை கூவத்தூர் குழப்பத்தால் அப்படியே எடப்பாடி கைக்கு சென்றது, அதன் பின் நடந்த குழப்பங்களால் தினகரன் பக்கம் சாய்ந்த செந்தில் பாலாஜி தினகரனின் வலதுகையாக இருந்தார். ஜெயலலிதா யிருந்த சமயத்திலேயே கொங்கு மண்டலத்தில் வெயிட்டு கையாக இருந்தவர் தான் செந்தில் பாலாஜி, பணபலம் கொங்கு பெல்ட்டை கட்டுப்பட்டி வைத்திருக்கும் செந்திலை தூக்கினால், அமமுக கூடாரமே காலியாகிவிடும், தற்போது இருக்கும் அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் என அவர்களை காலி செய்ய செந்தில் தான் சரியான ஆள், அதுமட்டுமல்ல, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர்.
ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார் இது தான் செந்தில் பாலாஜியின் சக்சஸ் ஃ பார்முலா. அதனால, தினகரன் தலையில் கை வைப்பதில் தப்பே இல்லை என களமிறங்கியது சபரீசன் டீம், நினைத்ததைப்போலவே திமுகவில் ஐக்கியமான அவர் அடுத்தடுத்து தனது அரசியல் வேலைகளை தொடர்ந்து வந்தார்.
அதில் முதல்கட்டமாக, ஜெயலலிதா மறைந்ததிலிருந்து, ஆனால் இப்போது ஜெ., மரணித்துவிட, ஆளுங்கட்சி மீதிருக்கும் மக்களின் அதிருப்தியை மிக தெளிவாக பயன்படுத்திக் கொண்டு, கரூர் மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் கரூர் நாடாளுமன்ற தொகுதியையே தம்பிதுரைக்கு எதிராக மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார் செந்தில். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நிற்கும் தைரியம் தம்பிதுரைக்கு வரக்கூடாது, அப்படியே வந்தாலும் பிரச்சாரத்தின் ஒவ்வொரு நாளிலும் தன்னை (செந்தில் பாலாஜியை) எண்ணி நடுங்கணும், இறுதியில் அவர் தோற்கணும்! இதுதான் செந்தில் பாலாஜியின் த்ரீ லைன்ஸ் அஜெண்டாவாகி இருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் கரூர் திருமாநிலையூரில் திமுக இணைப்பு விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, தம்பிதுரை அவர்களே இந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றித்தான் உங்களின் கடைசி வெற்றி. 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என்று இந்த நேரத்தில் சூளுரைக்கின்றோம். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கின்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்வோம் என சவால் விட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்து வருகிறது. இதில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இருக்கும் தம்பிதுரை, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்ததோடு, கடந்த ஒரு மாசமாக தொகுதி முழுவதும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். செந்தில்பாலாஜி திமுக வேட்பாளராக போட்டியிட இருப்பதால் இன்று அறிவாலயத்தில் நேர்க்காணலில் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த தம்பிதுரை காலையிலிருந்து கதிகலங்கிப் போயுள்ளாராம்.
இரண்டு முறை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக இருந்துவிட்ட தம்பிதுரை இந்த முறை டெபாசீட் இழக்கப்போவது நிச்சயம். என செந்தில் பாலாஜி சபதம் போட்டுள்ளதால், வேறு தொகுதிக்கு போய் விடலாமா என தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.
தம்பிதுரை மீது செந்தில் செம்ம காண்டில் இருக்க காரணம் என்ன? ஜெ., முன்னிலையில் தனக்கு ஏற்பட்ட சறுக்கலை பூதாகரமாக்கினார் என்பது மட்டுமில்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் செந்திலுக்கு எம்.எல்.ஏ. சீட்டே கிடைக்க கூடாது! என்று தம்பி ரொம்பவே துடித்தாராம். மீறி கிடைத்தாலும் கரூர் தொகுதி கிடைக்க கூடாது என்று போராடி அரவக்குறிச்சிக்கு அவரை தள்ளியதிலும் தம்பிதுரையின் பங்கு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, செந்தில்பாலாஜிக்கு ஆகாத விஜயபாஸ்கரை கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக்கி, அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்ததும் தம்பிதுரையின் கரங்கள் என்பதே செந்திலின் கடும் கோபம்.