பாவம் தமிழிசைக்கு வந்த இந்த நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது... கண்ணீர் விடவைக்கும் பயங்க சங்கடம்!!

இது பிஜேபி பண்ணைக் குசும்பா, இல்ல காங்கிரஸ் செய்த சதியா என பட்டிமன்றம் போட்டு பேசவைக்கும் அளவிற்கு அதி பயங்கர சம்பவம் ஒன்று நடக்கவிருக்கும் தேர்தலில் அரங்கேறியிருக்கிறது. 

Tamilisai  is in delicated situation for Kanyakumari constituency

இது பிஜேபி பண்ணைக் குசும்பா, இல்ல காங்கிரஸ் செய்த சதியா என பட்டிமன்றம் போட்டு பேசவைக்கும் அளவிற்கு அதி பயங்கர சம்பவம் ஒன்று நடக்கவிருக்கும் தேர்தலில் அரங்கேறியிருக்கிறது. அது ஒண்ணுமில்ல நடக்கப்போற தேர்தலில் பிஜேபி சார்பாக தனது சீனியர் பொன்னாறு களமிறங்கியிருக்கிறார். இதனால் தமிழிசைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் சொல்லணும் ஆனால், அதே தொகுதியில் தனது சித்தப்பாவான வசந்தகுமாரைநிற்கவைத்து தமிழிசையை மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது காங்கிரஸ்.

ஒரு கட்சியில்  அப்பா ஒரு கட்சிக்கும், மகன் அல்லது மகள் ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது இன்னொரு ரகம், அது போல் அண்ணன் ஒரு கட்சியிலும் தம்பி ஒரு கட்சியிலும் இருப்பார்கள்.  தேர்தல் என வந்துவிட்டால் வேறு வழியே இல்லாமல் என்னதான் குடும்பமாக இருந்தாலும்  காட்டு காட்டுன்னு காட்டுவார்கள். 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் மத்திய அமைச்சராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் பிஜேபி  சார்பில் போட்டியிடும் இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம்  காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் கன்னியாகுமரி தொகுதியில் பிஜேபியை எதிர்த்து தற்போது நாங்குநேரி எம்எல்ஏவாக உள்ள  வசந்தகுமார் போட்டியிடுகிறார்.இந்த வசந்த குமார் வசந்தகுமார் தமிழிசையின் சித்தப்பா ஆவார்.

Tamilisai  is in delicated situation for Kanyakumari constituency

கட்சி வேட்பாளரின் பலத்தை காட்டிலும் எதிராளியின் பலவீனத்தை தூண்டும் விதமாக தாறுமாறாக தாக்கிப் பேசுவார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை, தங்களது கட்சியின் சீனியருக்கு கட்சியின் தலைவர் என்ற முறையில்  பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது தமிழிசைக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படும் நிலை உள்ளது.பொன் ராதாகிருஷ்ணன் இதற்கு முன்னர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நிகழ்த்திய சாதனைகளை தமிழிசை பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பாரா, இல்லை தனது சித்தப்பு வசந்தகுமாரை தாக்கி பேசி ஒட்டு கேட்ப்பாரா என  காங்கிரஸ் மற்றும் தமிழக பிஜேபி மத்தியில் இப்போதே அதை பார்க்க ஆர்வம் எழும்பித்துள்ளது.

Tamilisai  is in delicated situation for Kanyakumari constituency

என்னதான் எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்தாலும், எதிரே நிற்பவர் தனது சித்தப்பா அவரை எப்படி தாக்கிப் பேசுவது? அப்படி தனது சித்தப்பூவை எதிர்த்துப் பேசாவிட்டாலும் கூட இவ்வளவு நாள் விசுவாசமாக இருந்தது காணாமல் போய் விடும், கட்சி தலைமையின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் அதுக்கூட பராவாயில்லை கோஷ்டி வைத்து குடைச்சல் கொடுக்கும் எஸ்.வி.சேகர் போன்றவர்கள் நாக்கு மேல் பல்லை போட்டு பேசுவார்கள் என்ற மனக்குமுறல் இருக்கிறதாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios