தேமுதிகவுடன் துரைமுருகனை பேச சொன்னதே ஸ்டாலின் தான்!! வெளி வந்த உண்மை...
திமுக கூட்டணியில் இணைய தேமுதிக தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட நிலையில், ஸ்டாலின் தேமுதிகவுடன் துரைமுருகனை பேசச்சொல்லியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேமுதிக நிர்வாகிகள் சிலர் இன்று தன்னை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாகவும், திமுகவில் சீட் இல்லை என்று கூறி அனுப்பியதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.
அதிமுக - பிஜேபி கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினமே தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. மாறாக மாறி மாறி கூட்டணி பேரம் பேசியது. ஆனாலும் தேமுதிக தங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கையில் இருந்தது பிஜேபி மற்றும் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் சொல்லி வந்தனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அதிமுக - பிஜேபி கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு பரப்புரையை தொடங்குகிறார். இந்தக் கூட்டத்திற்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் கூட , கூட்டணி கட்சி தலைவர்களின் போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. அதில், விஜயகாந்த் போட்டோவும் இருந்தது.
"
இதையடுத்து கூட்டணியில் தேமுதிகவுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என கடைசி நேரத்தில் கறாராக அதிமுக கூறியதால் தேமுதிக அப்செட் ஆனதால் மீண்டும் திமுகவுடன் கூட்டணியில் சேர துரைமுருகனை தேடி வீட்டிற்க்கே சென்றது. இந்த விஷயம் அதிமுகவிற்கு தெரியவரவே, அதிமுக கூட்டணி குறித்த பொதுக்கூட்டத்தின் மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அகற்றப்பட்டது.
இந்நிலையில், இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரை முருகன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், திடீர் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. ஆலோசனை நடத்திவிட்டு வெளியே வந்த தேமுதிக நிர்வாகிகள் தனிப்பட்ட விஷயம் பேசுவதற்கு வந்ததாக புருடா விட்டனர்.
இது குறித்துப் பேசிய துரை முருகன், விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் என்னுடன் பேசினார். என்னவென்று கேட்டேன். நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விரும்புகிறோம். எங்களுக்கு சீட் தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான் எங்கள் தலைவர் ஊரில் இல்லை. இரண்டாவது, சீட் கொடுப்பதற்கு எங்களிடம் சீட் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம். ஆக நீங்கள் எங்களுடன் வருவதாகக் கூறினீர்கள், அதன்பின் அங்கே போகிறீர்கள் இப்படி செய்தால் நாங்கள் என்ன செய்வது, மன்னிக்கவேண்டும் எனக் கூறிவிட்டேன்.
வீட்டிற்கு வந்தபிறகு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகேஷன் வந்திருந்தார்கள் அவரிடமும் நான் இதையேதான் கூறினேன். எங்களிடம் சீட் இல்லை, இப்போது வந்து என்ன பிரயோஜனம் எனக் கேட்டேன். ஏன் அங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் சரியானதாக தெரியவில்லை.
இந்த பேச்சுவார்த்தையில் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை காந்தி உடனிருந்தனர். ஆனால் எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை, சீட் கொடுப்பதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை, தலைவரிடம்தான் இருக்கிறது நான் தெளிவாக சொல்லிவிட்டேன், எங்கள் தலைவரிடம் நான் கண்டிப்பாக விவாதிப்பேன் என சொன்னேன் அதற்குப் பின். தலைவர் ஸ்டாலினிடம் பேச ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கல. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை அது ஒன்றும் பெரிய அவசரம் இல்லை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நைட் வருவார் அவரிடம் பேசுவேன் என தனக்கே உரிய பாணியில் அசால்ட்டாக பேசினார்.
மேலும் தெளிவாக பேசாமல் எங்களிடம் கூட்டணி பேசி எப்படியாவது எங்களுக்கு நீங்கள் செய்தே ஆகவேண்டும் என பேசினார்கள். ஆனால் நான் எனக்கு ஏதுவாக இருந்தாலும் தலைவரிடம் பேசுகிறேன் என சொல்லிவிட்டு அனுப்பினேன், சுதீஷும் டெல்லியில இருந்து வந்த மந்திரி போன் போட்டுக்கிட்டே இருக்காரு, அவர்கிட்ட நாங்க வரலேன்னு சொல்லிடுறோம்னு சொன்னாரு ஆனா இங்கேருந்து போனதும் கூட்டணி பேசிட்டு இருக்காரு, இப்படி தெளிவே இல்லாமல் மாறி மாறி பேசும் இவங்கள நம்பி நாங்க என்ன முடிவெடுப்பது ஏற்கனவே கொடுத்தவங்ககிட்ட திருப்பியா வாங்க முடியும் என கிழித்து தொங்க விட்டார்.
தேமுதிக துரைமுருகனை சந்திப்பதற்கு முன்பே ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள், அவர் வெளியில் இருப்பதால் பொருளாளர் துரைமுருகனை சந்திக்க நேரம் கேட்டு சந்தித்துள்ளார். துரைமுருகனை சந்திக்க சொன்னதற்கு காரணமும் வெளியாகியிருக்கிறது. அதாவது தெளிவான முடிவெடுக்காமல், பேரம் பேசுவதிலும் தெளிவாக இல்லாததாலும் இவர்களிடம் பேச ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லயாம். இவர்களை நம்பி எந்த அவசர முடிவெடுத்தாலும் அது பெரும் பின்னடைவாக அமைந்து விடுமோ என்பதால், அவர்களை மூக்கை உடைக்க சரியான ஆள் துரைமுருகன் தான் என எண்ணிய ஸ்டாலின் அவரிடம் பேசச் சொல்லி கழட்டி விட்டுட்டாராம்.