முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்ததன் மூலம் தென் மாவட்டங்களில் யாதவர் வாக்குகளை அந்தக் கூட்டணி கொத்தாக அள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

1991 முதல் 1996 வரை அதிமுக அரசில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் அந்த மாவட்டம் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 10 எம்பி தொகுதிகளுக்கு ராஜகண்ணப்பன் ஜெயலலிதா பொறுப்பாளராக நியமித்திருந்தார். 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளில் ராஜகண்ணப்பன் திமுக பொறுப்பாளராக செயல்பட்டார்.

ஒரே ஒரு நபருக்கு 10 தொகுதிகளை ஜெயலலிதா கொடுத்து இருக்கிறார் என்றால் அதன் மூலமே அந்த நபரின் செல்வாக்கு என்ன என்பது அரசியலை அறிந்தவர்களுக்கு தெரிந்துவிடும். 1996ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜகண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் எனும் ஒரு கட்சியை துவக்கினார்.

மக்கள் தமிழ் தேசம் கட்சி சென்னையில் நடத்திய மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மாநாடாக கருதப்பட்டது. சுமார் 25 லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழக அரசியல் அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி தனித்து களமிறங்கி தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வாங்கி திமுக அதிமுகவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்ந்தது. ஆனால் யாதவர்கள் கட்சி என்கிற ஜாதி முத்திரை குத்தப்பட்ட தால் ராஜகண்ணப்பன் நாள் தொடர்ந்து மக்கள் தமிழ் தேசம் கட்சியை நடத்த முடியவில்லை.

இந்த சமயத்தில் திமுக தலைவர் கலைஞர் ராஜ கண்ணப்பன் அழைத்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 2006ஆம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான ராஜகண்ணப்பன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜ கண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க கலைஞர் மறுத்துவிட்டார். இதனால் 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் ராஜ கண்ணப்பன். ராஜ கண்ணப்பனுக்கு 2009 ஆம் ஆண்டு for சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கையில் போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தார் ஜெயலலிதா. சிவகங்கை தொகுதியில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்று விட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் திடீரென வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு பா சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜகண்ணப்பன் தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன் பிறகும் அதிமுகவில் தொடர்ந்து தீவிரமாக ராஜகண்ணப்பன் இயங்கி வந்தார். சசிகலா குடும்பத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் உடன் இணைந்து சசிகலா குடும்பத்தை அதிமுகவிடமிருந்து பிடிக்கும் நடவடிக்கையில் ராஜகண்ணப்பன் ஈடுபட்டார். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட ராஜகண்ணப்பன் திட்டமிட்டிருந்தார். ஆனால் சிவகங்கை தொகுதி பாஜக விற்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் மதுரை விருதுநகர் நெல்லை போன்ற மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதி தனக்கு வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்தார் ராஜ கண்ணப்பன். ஆனால் நேற்று அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜகண்ணப்பன் பெயர் எதிலும் இல்லை.

இந்த நிலையில் மு க ஸ்டாலின் திடீரென சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார் ராஜ கண்ணப்பன். தற்போதும் கூட தென் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளிலும் யாதவர்களுக்கு என்று கணிசமான வாக்கு வங்கி உண்டு. ராஜ கண்ணப்பன் யாதவர்கள் தற்போதும் தங்களின் அடையாளமாக பலர் கருதுகின்றனர். இதே நேரத்தில் ராஜ கண்ணப்பனும் அதிமுகவில் இருந்து தன்னை அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர் என்று நினைத்து வருகிறார்.

எனவே தனது நேர்த்தியான தேர்தல் பணி மூலம் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு யாதவர்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாங்கி கொடுப்பார் ராஜகண்ணப்பன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.