அரிய சாதனை களை நாட்டுக்கு அர்ப்பணித்து, அயராது பாடுபட்டு வருபவர் மோடி... கண்ணாபின்னாவென புகழ்ந்த ராமதாஸ்
நீட்' நுழைவுத்தேர்வு விலக்கு, மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளிட்ட கோரிக்கை, 7 தமிழர்கள் விடுதலை அதிமுக கூட்டணி பிரசாரப் பொதுக் கூட்டத்தில், மோடியை கண்ணாபின்னாவென புகழ்ந்து தள்ளினார் ராமதாஸ்.
நீட்' நுழைவுத்தேர்வு விலக்கு, மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளிட்ட கோரிக்கை, 7 தமிழர்கள் விடுதலை அதிமுக கூட்டணி பிரசாரப் பொதுக் கூட்டத்தில், மோடியை கண்ணாபின்னாவென புகழ்ந்து தள்ளினார் ராமதாஸ்.
இந்திய நாடே, ஏன் உலகமே வியக்கும் அளவிற்கு, அரிய சாதனை களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு, அயராது பாடுபட்டு வருபவர், பிரதமர். இணைந்தது ஏன்?முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆழ்ந்து யோசித்து, வெற்றிகரமான கூட்டணியை அமைத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, வெற்றி பெறவில்லை என்றால், வேறு எந்த கூட்டணியும், வெற்றி பெற முடியாது.
இந்த கூட்டணியில், பா.ம.க., இணைந்திருப்பதற்கு காரணம், தமிழகத்தின் நலன்கள் பெருக வேண்டும் என்பதற்காக தான். அந்த வகையில், 10 அம்ச கோரிக்கைகளை, முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் வழங்கியுள்ளோம்.ராஜிவ் கொலை வழக்கில், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, தற்போது, பிரதமரிடம் வழங்கினேன்; அது நடக்கும் என்று நம்புவோம் ஜனநாயகம் தழைக்க, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும்.
முன்னாள் பிரதமர், வாஜ்பாயுடன், 6 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தோம். என் மீது, மிகவும் பிரியமாக இருப்பார். வாஜ்பாய் வியப்பு அப்போது, ஒரு மாநாடு நடத்தினோம். 18 தேசிய மொழிகளை, ஆட்சிமொழியாக்க வேண்டும் என்றோம். 18 மொழிகளிலும், அழைப்பிதழை அச்சிட்டோம்; அதை கண்டு, வாஜ்பாய் வியந்து போனார்.
அந்த வகையில், தற்போதைய பிரதமரை கேட்டுக் கொள்கிறோம். தமிழ் உட்பட, 22 தேசிய மொழிகளை, அலுவல் மொழியாக்க வேண்டும். 'நீட்' தேர்வு விலக்கிற்கு, இரு முறை, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்னையையும் போக்க வேண்டும்.
40 சதவீதம்காவிரி பாசன மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். இளைஞர் சக்தி, அளவிட முடியாதது. மக்கள் தொகையில், 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்; வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நல்ல கல்வியை கொடுக்கும் திட்டங்களை, பிரதமர், முதல்வர் இணைந்து செய்ய வேண்டும். இந்த கூட்டணி,புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும், மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளது. 21 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்ற உள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.