நீங்க எதை பற்றியும் கவலை படாதீங்க, நான் ஏற்கனவே எங்க கட்சித் தொண்டர்களிடம் சொல்லிவிட்டேன்.  ஜெயிக்கப்போறது நீங்கதான் என நம்பிக்கை கொடுத்து அனுப்பியுள்ளாராம் ராமதாஸ். 

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தேமுதிகவுக்கும் இடையே மணக்க கசப்பு இருந்து வந்த நேரத்தில், திடீரென அதிமுகவில் 7  + 1 தொகுதி கொடுத்ததால் கடுப்பானது தேமுதிக, வட தமிழகத்தில் மட்டுமே வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவிற்க்கே ஏழு கொடுத்தீங்க, எங்களுக்கு டபுளா வேணும் என அடம்பிடித்தது. நாள் நெருங்க நெருங்க ஒன்னுனா எக்ஸ்டராவா கொடுங்க எனக் கேட்டது. கடைசியாக ௫ கேட்டு அடம்பிடித்த நிலையில், 4 கொடுத்து வந்தா வாங்க வராட்டி போங்க என  கழட்டிவிடும் முடிவுக்கு வந்த நிலையில் ஓகே சொல்லி கூட்டணியில் இணைந்தது தேமுதிக.

இந்த இடைப்பட்ட நாட்களில், ராமதாஸோ தேமுதிகவை நம்பி இருக்கவேண்டிய அவசியம் நமக்கு வேண்டாம், 2 சதவிகித வாக்கு வாங்கி கூட முழுசா இல்லாத அவங்க கிட்ட கெஞ்ச வேண்டாம் என எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார். இந்த தகவல் தேமுதிகவுக்கு தெரிய வரவே மேலும் பாமக மீது நேரடியாகவே காண்டானது.

இந்நிலையில்,அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக இணைந்திருந்தாலும், அக்கட்சியின் தொண்டர்களிடையே ஒற்றுமை இல்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த தகவலை அறிந்த எட்டப்படியார்,  உங்க கட்சி வெற்றிப்பெற வேண்டுமானால் ஈகோவை விட்டுவிட்டு, இரு கட்சியின் தலைவர்களும் சந்தித்தால்தான் தொண்டர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் கூறியதையடுத்து, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் இருக்கும் மேடையில் ஏற மறுத்த ராமதாஸ், இடப்படியின் ஒற்றை வார்த்தைக்காக விஜயகாந்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவே சொன்னார். 

இப்படி நட்பு பழக ஆரம்பித்த ராமதாஸால், தேமுதிகவினர் சமாதானம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கள்ளக்குறிச்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சுதீஷ், ராமதாஸை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும், கள்ளக்குறிச்சியில் பாமகவினர் நமது கூட்டணிக்கு வேலை பார்க்கணும் அதை நீங்க தான் பாமக தொண்டர்களுக்கு சொல்லணும், நீங்க நான் எம்பியாக நீங்க மனசு வைக்கணும் என சொன்னாராம் சுதீஷ்.
 
நீங்க எதுக்கும் கவலைப் படவேண்டாம், நீங்க இங்கு வருவதற்கு முன்பே அதையெல்லாம் நான் சொல்லிவிட்டேன். நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னு நெனச்சுக்கோங்க, என நம்பிக்கையோடு அனுப்பி வைத்தாராம்.