அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அரக்கோணத்தில் வேட்பாளர் அறிமுகப்படுத்திய ராம்தசை அதிமுகவை புகழ்ந்து தள்ளியுள்ளார். 

அரக்கோணம்  தொகுதியில், அதிமுக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடுகின்றது. அங்கு வேட்பாளராக  ஏகே.மூர்த்தியை நிற்க வைக்கின்றனர். அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று ஆற்காடு மற்றும் வாலாஜாபேட்டையில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ராமதாஸ்,தலை நிமிர்ந்துசெல்பவர்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். தலைகுனிந்தவர்கள் திமுக கூட்டணியில் உள்ளனர். 

எங்களின் கூட்டணி தெளிந்த நீரோடை. திமுக தலைமையிலான கூட்டணி, தேங்கிக் கிடக்கும் குட்டை நீர்.  தேர்தலில் எங்களின் தேர்தல் அறிக்கையை திமுக 60 சதவிகிதம் காப்பியடித்தது. இந்த முறையும், பாமக-வின் தேர்தல் அறிக்கையை திமுக 90 சதவிகிதம் காப்பியடித்துள்ளனர். 

திமுக இதுவரை நல்ல வருமானம் கிடைக்கும் இலாக்காவுக்காக மட்டுமே போராடினார்கள். கடந்த 100 ஆண்டுக்காலமாக, ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்களால், மத்தியில் இனி ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. அதேபோல்தான், தமிழகத்திலும் திமுகவால் எப்போதுமே ஆட்சியைக் கைப்பற்ற முடியாது எனப் பேசினார்.

தொடர்ந்துபி பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்துபோராடி வரும் அதிமுக, பாமக கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள் என அதிமுகவை வாய்க்கு வாய் புகழ்ந்து தள்ளினார்.